Cinema

பெரியாரிஸ்ட்களை கதறவிட்ட "கிடுகு" திரைப்படம் வெளியாவதை தடுப்பது யார்? வெளியான பரபரப்பு தகவல் !

Kidugu movie
Kidugu movie

ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில், இயக்குனர் வீர முருகன்  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "கிடுகு - சங்கிகளின் கூட்டம்". இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம்  இணையத்தில் வெளியானது.


கிடுகு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதல் பெரியாரிஸ்ட் அமைப்புகள் படத்தை தடை செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்ததோடு, திரைப்பட முன்னோட்டக் காட்சிகளில் பெரியார் குறித்தும், திமுக அரசு குறித்தும் அவதூறாக சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் எனவும் இந்த திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புகார் அளித்தனர்.

"கிடுகு - சங்கிகளில் கூட்டம்" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் பல இடங்களில் திமுக அரசையும், தந்தை பெரியாரையும் அவதூறாக சித்தரித்து இயக்குநர் காட்சிப்படுத்தி உள்ளதாகவும், குறிப்பாக சில காட்சிகளில் "சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான், பின்பு மூட நம்பிக்கை ஒழிப்பதற்காக தாலியை அறுப்பான் இதுதான் திராவிட மாடல்" என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் சுதந்திரமே வேண்டாம் என்று சொன்ன ராமசாமி நாயக்கருக்கு தமிழ்நாட்டில் எதற்கு சிலை என்றும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடனே படத்தை தடை செய்யவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

பல படங்களில் இந்து மதத்தையும் பாஜக ஆட்சியை மறைமுகமாக கிண்டல் செய்தபோது, திரைத்துறையினரின் கருத்து சுதந்திரம் என பேசிவந்த பெரியாரிஸ்ட் அமைப்புகள் தங்கள் கொள்கைக்கு ஒரு ஆபத்து திரைப்படம் மூலம் வருகிறது என்று கூறியதும் கதற தொடங்கி இருக்கின்றனர்.

இந்த சூழலில் கிடுகு திரைப்படத்தை திரைப்பட தணிக்கை குழு பார்த்துவிட்டு முடிவுகளை அறிவிக்கவில்லை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது எனவும், மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கிடுகு பட இயக்குனர், வீர முருகன் குறிப்பிட்டுள்ளார், மேலும் கிடுகு திரைப்படம் வெளியாக தமிழக பாஜக உதவவேண்டும் என திரை துறையை சார்ந்த JSK கோபி வேண்டு கோள் விடுத்துள்ளார்.


இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் கிடுகு திரைப்படத்திற்கு ஆதரவு உண்டாகி இருக்கிறது, அதில், மலையாளம் பேசுபவர்கள் மலையாளிகள், தெலுங்கு பேசுபவர்கள் தெலுங்கர்கள், கன்னடம் பேசுபவர்கள் கன்னடர்கள் தமிழ் பேசும் நீ மட்டும் தமிழன் இல்லை.ஆம் நீ திராவிடன்., என்ற மடத்தனமான கேவலமான கோட்பாட்டை உடைத்தெறிய, வந்திருக்கிறது.'கிடுகு'இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட தடைகளை போடுகிறார்கள்.

தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு நமது அமோக ஆதரவை தரவேண்டும். தமிழனாக இருப்பவர்கள் நாம் ஆதரிப்போம்.திராவிடத்தை உடைப்போம் என கிடுகு திரைப்படத்திற்கு ஆதரவு குரல்கள் மெல்ல எழுந்து வருகின்றன.

இந்து மதத்தை விமர்சனம் செய்யும் படங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால் திராவிட மாடலையும், பெரியாரிஸ்ட் கொள்கையையும் விமர்சனம் செய்யும் கிடுகு திரைப்படம் வெளியாவதில் என்ன சிக்கல் என சமூக ஆர்வளர்களும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.