India

இருவர் நீக்கம் புதியவர்களுக்கு இடம் பட்டியலை வெளியிட்டது பாஜக தலைமை

tamil news
tamil news

பிரதமர் நரேந்திர மோடி முதல் மத்திய அமைச்சர்கள், பல மாநிலத் தலைவர்கள் மற்றும் எல்.கே.அத்வானி உட்பட 80 வழக்கமான உறுப்பினர்களைத் தவிர, பாஜக கட்சியின் நிர்வாகத்தில் 50 சிறப்பு அழைப்பாளர்களும் 179 நிரந்தர அழைப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர் .


அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பல மத்திய அமைச்சர்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்  முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழுவானது  கட்சியின் முக்கிய ஆலோசனைக் குழுவாகும், இது அரசாங்கம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க மற்றும் அமைப்பின் பிரச்சாரம் உட்பட  நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கிறது.இதில் தமிழகத்தில் இருந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல், பாஜகவின் தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பூ, ஹெச். ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் சமீப காலமாக பாஜகவை விமர்சனம் செய்துவரும் சுப்பிரமணியசாமி மற்றும் வருண் காந்தி ஆகியோர் பாஜக-வின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் ,விரைவில் இருவரும் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியில் இணையலாம் என்று கூறப்படுகிறது , சுப்ரமணியசாமி நிதி அமைச்சர் அல்லது திட்டக்குழு தலைவர் பொறுப்பு கேட்டதாகவும்.,

ஆனால் பிரதமர் மோடி மறுத்து விட்டதால் சமீப காலமாக அவர் பிரதமர் மற்றும் அவரின் அமைச்சரவையை விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது