24 special

#Breaking சற்றுமுன் எடப்பாடிக்கு கிடைத்த சோக செய்தி... சவுத் திட்டம் ஸ்டார்ட்..!

Sasikala, o pannerselvam,  edappadi
Sasikala, o pannerselvam, edappadi

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும் சரி... எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி பரபரப்பை உண்டாக்கி கொண்டு இருக்கும் கட்சி அதிமுக... இந்த சூழலில் தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மிக பெரிய நெருக்கடி உண்டாகி இருக்கிறது, அதிமுகவைக சேர்ந்த 27 மாவட்ட செயலாளர்கள் 36 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வம் தரப்பிற்கு தாவ இருப்பதாகவும்.. இதன் பின்னணியில்  பன்னீர் செல்வம் சசிகலா தரப்பு இணைத்து செயல்படுத்திய ஆபரேஷன் சவுத் திட்டம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.


உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனை தொடர்ந்து, 36 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 27 மாவட்ட செயலர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பன்னீர்செல்வம் - சசிகலா தரப்பில் பேச்சு நடத்துவது தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் காதுகளுக்கு சென்றுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் எனக்கூறி, , பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலராக தேர்வானார். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலர் பதவி செல்லாததாகி விட்டது.அதேநேரத்தில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார்; இந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 'பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது கருத்தை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், சசிகலாவும் வரவேற்றனர்.

சசிகலா, செப்டம்பர் தொடக்கத்தில் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். பன்னீர்செல்வமும், 'புரட்சி பயணம்' என்ற பெயரில், விரைவில் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என கூறப்படும் கோவையில் இருந்து சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார்.

இதற்கிடையில், தற்போதைய உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆகியோர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.அவர்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 36 எம்.எல்.ஏ.,க்கள்; 27 மாவட்ட செயலர்களுடன், தங்கள் அணிக்கு வருமாறு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுக்குழு உறுப்பினர்களில், ஒன்றிய செயலர்கள் அளவில் உள்ள, 50 சதவீதம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியிலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் 72% பணிகள் முடிவடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பன்னீர் செல்வம் அறிவித்த புதிய மாவட்ட செயலாளர்கள் படு தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்களாம்.

மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் பாஜகவின் ஆதரவு ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு மட்டுமே இருக்கும் என நம்பப்படும் தகவலாலும் எப்படியும் கட்சி பன்னீர் செல்வம் தரப்பிற்கே செல்லும் என்பதால் தீவுரமாக களத்தில் அவரது ஆதரவளர்கள் இறங்கி இருக்கிறார்களாம். சசிகலா தினகரன் ஆகியோரும் பழனிசாமி தங்களுக்கு கொடுத்த நெருக்கடியை மனதில் வைத்தும் பாஜகவுடனான கூட்டணியை மனதில் வைத்தும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுக்க திட்டமிட்டு இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த மிக பெரிய அடியாக பார்க்க படுகிறது.

சசிகலா தொலைபேசி வழியாக பேசி, எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரின் சம்மதம் பெற்று விட்டதாகவும் பொதுக்குழு கூட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கின் தீர்ப்புக்காக, 36 எம்.எல்.ஏ.,க்களும் காத்திருக்கின்றனர் என்றும் தீர்ப்பு பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில் அதிமுகவில் தற்போதைய நிலைமை அப்படியே எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராக செல்லும் என்று கூறப்படுகிறது.

தீர்ப்பு பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அணி மாற்றம் அதிரடியாக தொடரும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா - பன்னீர்செல்வம் தரப்பினர், அ.தி.மு.க.,வில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பன்னீர் செல்வத்தை தவறான நேரத்தில் எதிர்க்க நினைத்து இப்போது சட்ட ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் அதிமுகவை இக்கட்டான நிலைக்கு பழனிசாமி கொண்டு சென்று இருப்பதாக அவரது ஆதரவலர்களே புலம்பி வருகின்றனர், பன்னீர் செல்வம் அனைத்தையும் விட்டு கொடுத்தே சென்றார் முதல்வர் வேட்பாளர், எதிக்கட்சி தலைவர், நிர்வாகிகளை நியமிப்பது என அனைத்தையும் விட்டு கொடுத்த பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என பிளான் செய்த பழனிசாமிக்கு ஆபரேஷன் சவுத் திட்டம் மூலம் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது குழு உறுப்பினர்கள் என பலரை தங்கள் பக்கம் கொண்டுவந்து பதிலடி கொடுக்க தயாராகிவிட்டதாம் பன்னீர் செல்வம் கூட்டணி.

தவறான நேரத்தில் மிக தவறாக எடுத்த முடிவால் இப்போது சொந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற  பெயரை கூட பயன்படுத்த முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில் அறிக்கையை கூட கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.