Cinema

நடிகர் கேட்பது போல் இயக்குனர் பா.ரஞ்சித்தை கிண்டல் செய்து வெளியான கார்ட்டூன் இணையத்தில் படு வைரல்..!

Pa.ranjith
Pa.ranjith

சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் அட்டைகத்தி எனும் சினிமா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர், 


சென்னை சார்ந்த திரைப்படங்களை இயக்கி முதலில் அடையாளம் தேடி கொண்டவர், பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்தி கபாலி, காலா என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியதன் மூலம் சினிமாவில் தனி அந்தஸ்து பெற்றார்.

அதன் பிறகு தன்னை தலித் இயக்குனராக அடையாளப்படுத்தி கொண்ட ரஞ்சித் புது வகையான திரைப்படங்களை இயக்க முடிவு எடுத்தார், இந்த சூழலில் சாதி ரீதியான அடையாளம் ரஞ்சித் மீது விழுந்த காரணத்தால் அவரது படங்களை முன்னணி நடிகர்கள் தவிர்த்த நிலையில் ரஞ்சித்தே படங்களை தயாரிக்க தொடங்கினார்.

இது ஒருபுறம் என்றால் ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார், இந்த படத்திற்கு தணிக்கை துறை "A" சான்றிதழ் வழங்கியுள்ளது, இந்த படத்தில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பது போன்று காட்சிகள் இருப்பது குறித்து சர்ச்சை எழுந்தது, இதனை நியாயப்படுத்தும் விதமாக ரஞ்சித் பேசி இருந்தார்.

இந்த சூழலில்தான் ரஞ்சித்தை கிண்டல் செய்யும் விதமாக இணையத்தில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன அது புறம் என்றால் பிரபல கார்ட்டூனிஸ்ட் J ஜெகன் ரஞ்சித்தை கிண்டல் செய்யும் விதமாக கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார், அதில் அட்டை கத்தி இயக்குனர் கதை சொல்ல வருகிறார் என்றவுடன் நடிகர் கதையில் எனக்கு ஜோடி ஆனா அல்லது பெண்ணா என கேளுங்கள் என கிண்டல் செய்யும் விதமாக அந்த கார்ட்டூன் இடம்பெற்றுள்ளது.

புரட்சி இயக்குனர் என்ற பெயரில் புரட்சி செய்வார் என்று எதிர்பார்த்தால் இப்படி பெரும் புரட்சி செய்கிறாரே என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.