24 special

சற்றுமுன் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருக்கும் கிடைத்த கெட்ட செய்தி.. கொம்பன் களம் இறங்கிவிட்டான்!

Ops and eps
Ops and eps

இன்றைய நாளில் அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் என இருவரில் ஒருவருக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நடந்தது வேறாக அமைந்து இருக்கிறது, அதிமுக பொது குழுவில் ஓபிஎஸ் அனுமதி அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என அதிகாலை நடந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரனையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனால் ஈ.பி.எஸ் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது, அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர், போதாத குறைக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பலமாக கவனித்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட செயலாளர்களை கவனித்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் அடுத்த பொது குழுவிற்கும் செலவு செய்ய வேண்டுமா என்று அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அதிமுக பொது குழுவில் 23 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்க முடியாது என கே.பி. முனுசாமி அறிவிக்க அதனை பொது குழு ஏற்று கொண்டதாக அறிவிக்கப்பட்டது, இதனால் அடுத்த சட்ட ரீதியாக என்ன சிக்கல்கள் உண்டாகும் என்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. மேலும் அதிமுகவின் அவை தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேடையில் அறிவிக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படி ஓபிஎஸ் ஈபிஎஸ் என இருவருமே ஒரே நாளில் கெட்ட செய்தியை சந்தித்து இருக்கின்றனர், இந்த சூழலில் விரைவில் சட்ட. ரீதியாக இரண்டு தரப்பும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று கூறப்பட்டு இருப்பதால்  விரைவில் மீண்டும் அதிமுக அரசியல் வாழ்க்கையில் தேர்தல் ஆணையம் என்ற கொம்பன் களம் இறங்கி இருக்கிறது.

எம்ஜியார் மறைவின் போது சொந்த கட்சியினரால் ஜெயலலிதா ஓரம்கட்ட பட்டதை போன்று இன்று பன்னீர் செல்வம் நிலை உருவாகி இருக்கிறது, மேலும் அன்று சசிகலா எத்தனை ஆதரவுடன் இருந்தாரோ அதே நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்று இருக்கிறார், அரசியலில் ஒரு நாள் என்பது மிக பெரிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்பது தற்போது அதிமுக அரசியலை நன்கு கவனித்துவருபவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

எனினும் அதிமுக சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்கள் இருப்பதால் ஓபிஎஸ் ஈபிஎஸ் என இரண்டு தரப்பில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் எனவும், காட்சிகளும் ஆதரவாளர்களும் மாறலாம் என்பது சசிகலா அரசியல் வாழ்க்கையை ஆராய்ந்தால் அறிந்து கொள்ளலாம், இப்போதே இரண்டு தரப்பும் பாஜக பக்கம் தங்களுக்கு ஆதரவான ஆட்களை பிடிக்க தொடங்கியுள்ள சூழலில் விரைவில் அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறலாம் என்று கூறப்படுகிறது.