வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக இடையே காரசார தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு புறமும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மறுபுறமும் திமுகவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் திமுகவின் மிக முக்கிய வாக்குறுதியான "நீட் விலக்கு" பெறுவது குறித்த ரகசியத்தை ஆட்சிக்கு வந்த பிறகு சொல்கிறேன். அதன் மூலம் நீட் விலக்கு பெறுவேன் என உதயநிதி குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை எதிர்க்கட்சிகள் அனைவரும் எழுப்பும் மிக முக்கிய கேள்வி அந்த ரகசியத்தை பயன்படுத்தி எப்படி நீட் விலக்கு பெறுவது என்பதே. ஆனால் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றி திமுக, கவர்னருக்கு கொடுத்திருந்த நிலையில், அவர் திருப்பி அனுப்பியதும் மீண்டும் கவர்னரிடம் நீட் விலக்கு மசோதா கொடுத்திருப்பதும் தற்போதைய நிலவரம்.
ஆனால் அதை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்புவாரா இல்லையா என்பது அடுத்த கேள்வி. ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பினால் அதனை அவரும் திருப்பி அனுப்புவாரா என்பது அடுத்த எதிர்பார்ப்பு. இப்படியாக நீட் விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் சென்று கொண்டிருக்கும் தருவாயில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஒரு பக்கம் தயாராகி கொண்டு தான் இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். அப்போது, நகைக்கடன் தள்ளுபடி என்னாச்சு என பொதுமக்கள் கேள்வி எழுப்ப.. இன்னும் 4 ஆண்டு கால ஆட்சி உள்ளது என உதயநிதி பதில் கொடுத்தார். அடுத்ததாக, நீட் பற்றி பேசும் போது... அனைவரும் நீட் ரகசியத்தை கேட்கின்றனர். நான் இப்போது அந்த ரகசியத்தை சொல்கிறேன் என குறிப்பிட்டு...அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனை மறைத்து விட்டனர் என்று பேசியிருக்கிறார். இந்த பதிலால் மக்கள் டென்ஷனாகி உள்ளனர்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பேசும்போது, பிரச்சாரத்தின் போது உதயநிதி நீட் ரகசியத்தை சொல்வதாக குறிப்பிட்டு அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது இதனை மறைத்து விட்டனர் என்று பேசியிருக்கிறார். இது என்னமோ மிகப்பெரிய அதிசயம் மாதிரியோ... இதை கண்டுபிடித்த அவருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். அவ்வளவு ஏன், தமிழக அரசு இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கூட கௌரவிக்கலாம் என பங்கமாக பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆகமொத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போதும் நீட் ரகசியத்தை சொல்கிறேன் என சொல்லி தான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பது கூடுதல். இதன் மூலம் நீட் விலக்கு பெறுவது என்பது அரோகரா என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
More watch videos