தமிழகத்தில் தற்போது பெரும் பெரும் விவாதமாக மாறியுள்ள நீட் விலக்கு மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி க்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எடப்பாடிக்கு நேரடியாக ஒரு சவால் விடுத்துள்ளார். அதில்....
"அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது கிடையாது. எடப்பாடியும் ஓ பன்னீர்செல்வம் வந்த பிறகுதான் நீட் தேர்வு எழுத அனுமதி அளித்து கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு நடைபெற்று வருகிறது.
நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் போட்டு கொண்டு வந்தனர். அதனை ஆளுநரிடமும் மத்திய அரசிடமும் கொடுக்கும் போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த விஷயத்தை அதிமுக மூடி மறைத்து விட்டனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது மத்திய வழக்கறிஞர் தான் இந்த விஷயத்தை தெரிவித்தா. இந்த தகவலை குறித்து நேரடியாக விவாதம் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுகிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம்; நீங்கள் தயாரா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தக்க பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை ஏற்க தயார். ஒரு பொது இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நானும் பன்னீர்செல்வம் அண்ணனும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் நேருக்கு நேர் விவாதம் செய்யலாம். இதை மக்களும் நேரடியாக பார்க்கட்டும்.
ஊடக நண்பர்கள் அனைவரும் அங்கு வரட்டும். நாம் செய்யும் விவாதத்திற்கு பிறகு மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும். சும்மா வாய் பேச்சுக்கு சவால் விடக் கூடாது. நாங்கள் அதனை உறுதியாக ஏற்கிறோம். சவால் என்றால் சந்திக்கத் தயார் என அதிரடியாக பேசி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு மசோதாவுக்கு தான் என குறிப்பிட்டிருந்தது. அதன்படி அதற்காக முயற்சி மேற்கொண்டாலும் அதற்கான மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.
என வே நீட் விலக்கு என்பது தற்போது எட்டாக்கனியாக தான் இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தலில் நீட் விவகாரத்தால் திமுகவிற்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது.
More watch videos