24 special

யோகி ஆதித்யநாத் மீது அவதூறு..! காவலர் மீது நடவடிக்கை..!

Yogi adityanath
Yogi adityanath

உத்திரபிரதேசம் : காவல் அதிகாரி  ஒருவர் முதல்வர் அலுவலகத்தை பற்றியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றியும்  சக அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவதூறாக கருத்து கூறியுள்ளார். அதை அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து பிஜேபி தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிகிறது.


உத்திரப்பிரதேசமாநிலம் பாரபங்கி வட்டம் அசந்திரா காவல்நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருப்பவர் தியானேந்திர பிரதாப் சிங். இவர் தனது அலுவலக அறையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது முதல்வரின் மாண்பை குலைக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். மேலும் அலுவலகத்தை பற்றியும் தவறாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த உரையாடலின்போது அருகில் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதை வீடியோ எடுத்துள்ளார். மேலும் பார்பங்கி பிஜேபி மாவட்ட தலைவரான ஷஷாங் குஸ்மேசுக்கு அந்த வீடியோவை அனுப்பினார். ஏற்கனவே இந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மீது பல புகார்கள் உள்ளநிலையில் அந்த பத்திரிகையாளரும் சில நாட்களுக்கு முன்னர் காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் வாட்ஸிடம் புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து குஸ்மேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் " பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்திற்கெதிராக கிளர்ச்சியை உண்டாக்க தியானேஸ்வர் முயல்கிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இது முதல்முறையல்ல என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் பார்பங்கி போலீசார் கூறுகையில் "முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக ஆட்சேபத்துக்குரிய அவதூறான கருத்துக்களை கூறியுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளனர்.