![Vijayakanth, Ponnambalam](https://www.tnnews24air.com/storage/gallery/8rjYsmlom0iwen9Bm7ZE1KV1Z6E9nZfMwOb7RfOW.jpg)
புரட்சி கலைஞன் எனச் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்தின் படங்களை பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு ஆக்ஷனை நேரில் பார்த்த பீல் கிடைக்கும். தான் பச்சை தமிழன் என்பதற்காகவே விஜயகாந்த் தமிழ் மொழிகளை கடந்து வேறு எந்த மொழியிலும் நடித்தது இல்லை. தன்னை பார்க்க வருவோருக்கு உணவு இல்லை என்று ஒரு போதும் சொல்லாத மனிதனாக விளங்கியவர் நாளடைவில் அரசியலில் வந்து சேவை செய்து வர உடல்நிலை பிரச்சனை காரணமாக அரசியலில் இருந்து விலகி மருத்துவத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
வெகு நாட்களாக மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்ட விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நிலை தொய்வு ஏற்பட்டு காலமானார். இந்நிலையில் விஜயகாந்தை காண 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர் சினிமா துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி நேற்று இரவு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று முத்த அவர் அடக்கம் செய்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அனுமதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் குறித்து புதிய தகவல் ஒன்றை நடிகர் பொன்னம்பலம் தெரிவித்தது நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொன்மபலம் அதில் " ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக் போட்டு துப்பிக்கொண்டு இருந்தேன். அதை பார்த்து தனது உதவியாளரிடம்..
'யார் இந்த காட்டான்? ஆள் வர்றதை கூட பாக்காம கண்ட எடத்துல துப்பிக்கிட்டு இருக்கான்?' எனக்கேட்டார். 'அந்த ஹிந்தி வில்லனுக்கு டூப் போட வந்த ஆளுதான் இவரு' என்றார். 'அப்படியா? இவரையே நடிக்க சொல்லு. ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம்' எனக்கூறி.. என் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கினார். சில மாதங்கள் கழித்து என் தங்கைக்கு கல்யாணம் வைத்திருந்தேன். 19 ஆம் தேதி கல்யாணம். 16 ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். 'கல்யாண செலவுக்கு உதவி வேணுமா?' என்றார். பாதிக்கும் மேல் சமாளித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது' என்றேன்.
எங்கள் இருவருக்குமான முக்கியமான சண்டைக்காட்சி சில வாரங்கள் கழித்து எடுக்க வேண்டியது. ஆனால் இயக்குனரிடம் பேசி 18 ஆம் தேதி இரவு அந்த ஷூட்டிங்கை வைக்க சொன்னார். பகல் முழுக்க வேறு படத்தில் நடித்துவிட்டு... இரவில் என்னுடன் சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு, உடனே மண்டபத்திற்கு வந்து என்னை பார்த்தார். 'இந்தா.. இதுல 50,000 ரூபா இருக்கு. உன்னோட சம்பளப்பணம் என கொடுத்தார். ஒரு முறை விஜயகாந்த் வீட்டிற்கு சென்றபோது எனக்காக 2 கிலோ நல்லி எலும்பு எடுத்து சமைத்து வைத்தார். அவரிடம் பேச சென்றபோது முதலில் போய் சாப்பிட்டு வா என சொல்லி என்னை சாப்ட வைத்தவர். விஜயகாந்த் இப்போ இருந்தால் நான் கஷ்டப்படமாட்டேன் என நெகிழ்ச்சியாக கேப்டனை எப்போதும் மறக்க மாட்டேன் கூறியுள்ளார்".