Tamilnadu

அடிமடியில் கைவைப்பது போன்று அண்ணாமலை கேட்ட கேள்வி என்ன செய்ய போகிறது திமுக அரசு?

annamalai mks
annamalai mks

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பு பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் கதி கலங்க செய்துள்ளது, எந்த வித முன்னறிவிப்புமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து இன்று அறிவிப்பு வெளியானது, இதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார் அவர் எழுப்பிய கேள்வி பின்வருமாறு :


மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், திமுக அரசு இந்த முறையாவது விலை குறைக்குமா?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக அரசு இந்த முறையாவது விலை குறைக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


அண்ணாமலை எழுப்பிய கேள்வியை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது இனியும் திமுக அரசு தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் கடும் நெருக்கடியில் தள்ளப்படும் என்பது மட்டும் அண்ணாமலை எழுப்பிய கேள்விகள் மூலம் உறுதியாகி இருக்கிறது.