ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தலைவர் 171ல் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்து அப்டேட் வன்மத்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது தலைவர் 170 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அண்மையில் ஷூட்டிங்கும் தொடங்கியது.
முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மோலிவுட் நடிகர் ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், டோலிவுட் நடிகர் ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் எப்படி நடிப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தலைவர் 170ஐ முடித்துவிட்டு அடுத்ததாக 171ல் நடிக்க உள்ளார். தலைவர் 171ஐ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இதுவரை 171ல் நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட் வராமல் இருந்த நிலையில் ரசிகரக்ளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று பரவிவருகிறது.அதாவது, தலைவர் 171ல் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவிருக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு யோசித்த லோகேஷ் கனகராஜ் தமிழில் ஃபகத் பாசில் கமல்ஹாசனின் விக்ரம் படம், உதயநிதியின் மாமன்னன் படம் ஆகியவற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால். இதனால் தமிழக ரசிகர்களுக்கு சலுப்பு அடித்துவிடும் என்று வில்லனை மாற்ற முடிவு எடுத்துள்ளாராம்.
இதற்கிடையில் திரும்பவும் மோலிவுட் நடிகரை வில்லனாக நடிக்க லோகேஷ் யோசித்து பிருத்விராஜை, தலைவர்க்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் பிருத்விராஜ் அதற்கு ஓகே சொன்னதாகவும், அதற்கு ரஜினிகாந்தும் டபுள் ஓகே சொன்னதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மலையாளத்தில் பிடித்த படம் அய்யப்பனும் கோஷியும் படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனை தமிழில் ரிமேக் செய்ய ஆசை இருப்பதாக கூறினார். இந்த படத்தில் பிரிதிவிராஜ் நடிப்பு பங்கமாக இருக்கும் அதனாலே தற்போது தலைவர் 171ல் வில்லன் கதா பாத்திரத்தில் தேர்ந்து எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பிருத்விராஜ் தற்போது சலார் படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே கனா கண்டேன் படத்தில் வில்லனாக பிருத்வி ராஜ் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.