24 special

காங்கிரஸ் கட்சி இனி அவ்வளவுதானா?..? ஜே.பி.நட்டா..!பட்டியலிட்ட ஜே.பி.நட்டா...!

jp nadda , rahul gandhi
jp nadda , rahul gandhi

காங்கிரஸ் கட்சி மனதளவில் திவாலாகிவிட்டது, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக நினைத்து அக்கட்சி நாட்டை எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டினார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.கர்நாடக சட்மன்றத்தின் பதவிகாலம் வரும் மே 24-ஆம் தேதி முடியவடையும் நிலையில், அங்குள்ள 224 சட்மன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் விஜய் சங்கல் யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. விஜய் சங்கல் யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று பெங்களூர்-வில் உள்ள கேஆர் புரம் சட்டன்ற தொகுதியில் நடைபெற்ற பொதுக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது;


காங்கிரஸ் கட்சி “மனதளவில் திவாலாகி விட்டது”, இந்திய ஜனநாயகத்தில் செயல்பட அக்கட்சிக்கு துளியளவும் தகுதி கிடையாது. பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக நினைத்து அக்கட்சி நாட்டையும், நாட்டு மக்களின் எதிர்ப்பையும் தான் சம்பாதித்து வருவதாக கூறியுள்ளார். இந்தியாவை அழிக்கும் பாதயாத்திரை..!காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,000 கி.மீ தொலைவில் நிறைவடைந்த “பாரத் ஜோடா யாத்திரை”-யை சுட்டிக்காட்டிய அவர்,

பாரத் ஜோடா யாத்திரையின் போது மக்கள் யாரும் ராகுல் காந்தியை கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் அவர் இங்கிலாந்தில் உரையாற்ற சென்று விட்டதாக விமர்சித்த நட்டா மேலும், இந்த யாத்திரையானது இந்தியாவை அழிக்கும் பாதயாத்திரைகவே அமைந்து விட்டதாக  விமர்சித்துள்ளார். அதேசமயம் பிரதமர் மோடிக்கு எதிராக குறைந்த வார்த்தைகளை  தொடர்ந்து பயன்படுத்தி வரும் காங்கிரஸை மக்கள் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்றார். மேலும், இதுபோன்றஅரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் செயல்படும் தகுதி கிடையாது என்று அக்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை விமர்சித்த ஜே.பி.நட்டா...கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியாகும். இந்த கூட்டணி கட்சியை விமர்சித்த ஜே.பி.நட்டா ஊழல், குடும்ப ஆட்சி, பிரித்தாளும் அரசியல், ஜாதி வெறி மற்றும் வகுப்பு வாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் ஜெ டி எஸ் கட்சி. நம் நாட்டில் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஜெடிஎஸ் கட்சிக்கு வாக்களிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம். ஜே டி எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி “ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” இது, கர்நாடாக மாநிலத்தில் வகுப்புவாத வெறுப்பை ஏற்படுத்திய எ.எஃப்.ஐ-க்கு கட்சிக்கு ஆதரவு அளித்தன. ஆனால் பாஜக அரசின் மூலம் நாடுமுழுவதும் அவை தடை செய்யப்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஜே.பி.நட்டா...பிரதமர் மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளதாக குறிப்பிட்ட  ஜே.பி.நட்டா புதுமைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கர்நாடக  குறிப்பாக பெங்களூரு முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கோவிட் மற்றும் உக்ரைன் போர் மூலம் உலக நாடுகளில் பொருளாதார நெறுக்கடிக்கு ஆளான போது, மோடி தலைமையிலான இந்தியா அரசு அனைத்தையும் சிறப்பாக கையாண்டு, நமது பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருந்ததாக கூறினார். 

மேலும், 2014-ஆம் ஆண்டு 92 சதவீத மொபைல் போன்களை இந்தியா இறக்குமதி செய்த வந்த நிலையில், தற்பொது 97 சதவீத மொபைல் போன்களை நம் நாட்டிலே உற்பத்தி செய்து வருகிறது என்றார். நம் நாட்டில் ஆப்பிள் போன்கள் உற்பத்தியாகி வரும் நிலையில், விரைவில் அது கர்நாடக மாநிலத்திலும் உற்பத்தி செய்ய, ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல, டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, நாட்டில் அதிக அளவில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் சாலை உள்கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் போன்ற பாஜக அரசின் சாதனைகளை பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்டு பேசியுள்ளார்.