தமிழ் திரையுலக சேர்ந்த முன்னணி பிரபலம் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சுகள் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னையில் இக்கட்சியின் மாநில பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று அதில் கட்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட விதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொது உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற பின் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ் நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுடன் தமிழ்நாடு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் 3 பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கை வெளியான போது சமூக வலைதளம் முழுவதும் விஜய் அரசியலில் இறங்கியது குறித்த கருத்துக்களும் எழுந்தது. பரவால்ல இன்னும் காலம் தாழ்த்தாமல் வந்துட்டாரே என்ற விமர்சனங்களும் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவுகளும் முன்வைக்கப்பட்டு வந்தது. மேலும் பல அரசியல் விமர்சகர்களிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்தும் அரசியல் தொடங்கியது குறித்து கேட்கப்பட்ட பொழுது அவர்களின் பெரும்பாலானோர் விஜயின் அரசியல் பிரவேசத்தை நாங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான் அதுவே தற்போது நடந்திருக்கிறது, பார்க்கலாம் எப்படி இவரது அரசியல் பயணம் செல்கிறது என்று! எனவும் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருப்பது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஆபத்து என்றும் கூறினார் ஏனென்றால் இந்து சமயம் மற்றும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தங்களது ஓட்டுகளை மாற்றி விதைக்கு போட வாய்ப்பு இல்லை ஆனால் இதுவரை சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெருவாயாக பெற்று வரும் திமுகவின் ஓட்டுகள் அனைத்தையும் விஜய் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
ஏற்கனவே விஜயின் திரைப்படங்கள் வெளியிடுவதில் மறைமுகமாக எதிர்ப்பை தெரிவித்து வந்த திமுக தற்பொழுது விஜயால் தன் கட்சி மற்றும் தன் ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது என்பதை தெரிந்தவுடன் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பல youtube சேனலை கொண்டவர்களை விஜயை மறைமுகமாக தாக்கி பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விஜய் அரசியலில் தொடங்கியதை யூடியூப் சேனல் மூலம் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து வரும் பலர் விஜயை மறைமுகமாக தாக்கி வருகின்றனர். அதாவது விஜய் ஏன் அரசியலுக்கு வந்தார் அவர் எதற்காக இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார் தமிழக வெற்றிக்கழகம் என்று வைக்கிறார் தமிழகம் என இதற்கு வைத்தார் தமிழ்நாடு என்று தானே அவர் வைக்க வேண்டும் ஏனென்றால் இதற்கு முன்பாக தமிழகம் தமிழ்நாடு என்ற பேச்சுக்கு ஆளுநர் மற்றும் திமுகவிற்கு இடையே பெரும் உரசல் ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது தமிழகம் என பெயர் வைப்பதற்கு முன்பாக விஜய் யோசித்து இருக்க வேண்டும் அல்லவா ஏன் யோசிக்கவில்லை என்ற பல கேள்விகளையும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் யோசித்து விஜய்க்கு எதிரான புதிய புதிய எதிர்ப்புகள் வருவதற்கான கருத்துக்களை பேசி வருகின்றனர். மேலும் இவை அனைத்திற்கும் பின்னணியில் திமுக இருப்பதாக அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளது.