24 special

கோபத்தில் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்... காலியாகப் போகும் திமுக.,...திட்டவட்டமாக கூறிய ஆசிரியர் சங்கம்....

DMK
DMK

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகளும் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த பாஜக இந்த தேர்தலிலும் அதிக தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும் ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக சிறப்பான வெற்றியை கண்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி அடைவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்த நிலையில் தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை என்பது தமிழக பாஜகவை சோர்வடைய வைத்தது. ஆனால் தேர்வு முடிவுகள் அனைத்தும் முழுமையாக வெளிவந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிவிதமாக இருப்பது வெட்ட வெளிச்சமானது.


ஏனென்றால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தை  பிடித்துள்ளது. அதே சமயத்தில் அதிமுகவை பெரும்பாலான தொகுதிகளில் பாஜக பின்னுக்கு தகுதி உள்ளது. இது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை உறுதி செய்ததோடு 2026 இல் பாஜகவிற்கு சாதகமான ஒரு சூழல் கண்டிப்பாக நிலவும் என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வெற்றியும் சில ஓட்டுகள் வித்தியாசத்தில் நடக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை தொகுதியில் போட்டியிட்ட 37 வேட்பாளர்களுக்கு மத்தியில் அண்ணாமலைக்கான ஆதரவு பேரளவில் இருந்தது. அதுமட்டுமின்றி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும் 4,50,312 வாக்குகள் கோவை தொகுதியில் கிடைத்தது. அதிலும் குறிப்பாக கோவை தொகுதியில் இருந்த மொத்த அஞ்சல் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு வந்த வாக்குகளுக்கு இணையான வாக்குகளை அண்ணாமலை பெற்றிருந்தார்.

அதே சமயத்தில் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு தொகுதிவாரியாக கிடைத்த வாக்கு சதவீதத்தில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதிகளில் கிடைத்த வாக்கு சதவீதத்தை விட தெற்கு கோயமுத்தூரில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு முக்கிய காரணம் திமுக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றாமல் திமுக அரசின் மீது அவர்கள் கொண்ட அதிருப்தியாலே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் மொத்தம் பாஜகவிற்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில், கோவையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார்.

மேலும் இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாயவன் இவ்விழாவில் பேசும் பொழுது, ஆசிரியர்கள் எவ்வளவுதான் கடமை தவறாமல் கடுமையாக பணியாற்றினாலும் அவர்களின் உரிமைகளை பறிப்பதில் தமிழக அரசு குறியாக இருக்கிறது. பல்லாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பாமல், இருக்கும் ஆசிரியர்கள் மேல் பனிச் சுமையை அதிகரிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் சரி இல்லை என்று ஆசிரியர்கள் மீது குறை கூறுகிறார்கள். திமுக அரசு ஆசிரியர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு ஓட்டளித்து ஆட்சிகள் அமர வைத்தவர்கள் ஆசிரியர்கள் ஆனால் வருகின்ற 2026 ஆம் தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு இறக்கப் போவதும் ஆசிரியர்கள் தான் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த செய்திகள் வெளியாகி அறிவாலய தலைமையை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆசிரியர்கள் தரப்பில் திமுக மீது கொண்டுள்ள அதிருப்திகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமான வாக்குகளாகவே மாறும் அதன் தொடக்கமே கோவையில் அண்ணாமலைக்கு கிடைத்த வரவேற்பு மற்றும்  2026 ஆசிரியர்களின் வாக்கு நிச்சயம் பாஜக பக்கம் திரும்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.