Cinema

கூட்டத்தில் அவமதிக்கப்பட்டாரா சூப்பர் ஸ்டார்.... வைரலாகும் வீடியோ!! கல்யாண டென்ஷன்ல சூப்பர்ஸ்டாரையே மறக்கிறதா!!

RAJNIKANTH, ACTOR ARJUN
RAJNIKANTH, ACTOR ARJUN

புதிதாக சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த ஜோடிக்கு திருமணம் ஆகிறது என்றால் அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் என அனைத்துமே சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவும். அதனை தொடர்ந்து ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் அந்த வீடியோக்களும் இணையதளங்களில் படுவைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு முக்கிய பிரபலம் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் அர்ஜுனனின் மூத்த மகளாவார் இவருக்கும் குணச்சித்திரம் மற்றும் காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் அர்ஜுன் சென்னையில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


அதற்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார், சிவகார்த்திகேயன் பிரசாந்த் மற்றும் சினேகா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர் திரை பிரபலங்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவுகிறது. மேலும் திருமணம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இராமையா இருவரும் பேசினார்கள், மேலும் அர்ஜுன் மற்றும் ராமையா இருவரும் புதிய சம்பதிகளாக பேசினார்கள். இதனை அடுத்து திருமணத்திற்கு முன்பாகவே தம்பி ராமையா தனது மருமகள் ஐஸ்வர்யா அர்ஜுனிடம் திருமணத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ஐஸ்வர்யாவும் ஒத்துக்கொண்டு இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதா அல்லது காதல் திருமணமா என்ற வகையிலான பேச்சுகளும் எழுந்து வந்தது. அதற்கு இவர்களது திருமணம் காதல் திருமணம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சர்வைவா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியில் உமாபதி ராமையாவும் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒருமுறை அர்ஜுன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் அந்த செட்டிற்கு சென்றதாகவும் அப்பொழுது உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இடையே காதல் ஏற்பட்டு பிறகு வீட்டில் இது குறித்து கூறி இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்ட திருமணத்தில் இந்த காதல் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படி ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இன் திருமணம் குறித்த வீடியோக்கள் பேச்சுகள் சமூக வலைதளம் முழுவதும் வைரலாகி வருகிற நிலையில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பரிசு ஒன்றை வழங்கிய பொழுது அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவின் குடும்பத்தினர் அதனை கவனிக்காமல் விட்டதாகவும் அதனால் சூப்பர் ஸ்டார் அந்த பரிசு பொருளை உடனடியாக கீழே வைத்துள்ளார்.  இதனால் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டு விட்டாரா என்ற வகையிலான பேச்சுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. அதே சமயத்தில் கூட்டத்தில் கவனிக்காமல் இருந்திருப்பார்கள் இதனை ரஜினிகாந்தே பொருட்படுத்தவில்லை என மற்றொரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.