24 special

தமிழகத்தில் அதிகரிக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை.....மௌனத்தோடு தலையாட்டும் முதலவர்!

Mkstalin, annamalai
Mkstalin, annamalai

தமிழகத்திலுள்ள இளைஞர்கள் போதைப்பழக்கத்தில் அடிமையயாகி சீரழிந்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெறும் தமிழக அரசின் மூலம் கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் நெல்லையில் கஞ்சா போதையில் 6பேர் கொண்ட கும்பல் பட்டியலினத்தவருக்கு செய்யத செயல் தமிழ்க்கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த 30 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் குளிப்பதற்காக சென்று  உள்ளார்கள். குளித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலானது பயங்கர ஆயுதத்துடன் அவர்களை தாக்கி அவர்களிடத்தில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளார்கள்.

மேலும் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டு, அவர்கள் இருவரும் பட்டியலின சாதி என்று சொன்னதும் அவர்களை, அந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜாதி பெயரை சொல்லி சரமாரியாக தாக்கி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து,  அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்து சித்திரவதை தேய்த்துள்ளனர்.  அதன் பிறகு அவர்களிடம் இருந்து இரண்டு பேரும் தப்பி இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பட்டியலின இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார்  விசாரித்ததில் பொன்னுமணியை கைது செய்து,  அவர்களுடைய நண்பர்களான நல்லமுத்து,  ராமர்,  சிவா,  லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரையும் தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.  இது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு 4 வழக்கு பதிவு செய்தனர். அந்த 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர் உடன் பயின்ற சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஓய்வதற்குள் மீண்டும் அங்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியது தமிழக அரசின் சட்ட ஒழுங்கை காட்டுகிறது.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள்  பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது,

இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். என்று திமுக அரசின் சட்ட ஒழுங்கை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாக திமுக ஆட்சி என்றாலே அராஜகம், வன்முறை மற்றும் திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். 

சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் தலையாட்டும் பொம்மை போலவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது மது போதையை விட கஞ்சாக்கு தான் இப்போது உள்ள தலைமுறை இளைஞர்கள் அடிமையாகி கிடப்பது குறிப்பிடத்தக்கது.