24 special

ஆர் எஸ் பாரதிக்கு கிடைத்த சரியான பதிலடி....!

Rsbharathi,ponmudi
Rsbharathi,ponmudi

நான் அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர் என உள்ளே நுழைய முயன்ற ஆர் எஸ் பாரதியை மத்திய பாதுகாப்பு படையினர் விரட்டி விட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தற்போது திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


திமுகவிற்கோ அல்லது திமுக தலைவர்களுக்கோ ஏதேனும் சட்ட ரீதியான பிரச்சனை என்றால் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி  முதலில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் முதன் முதலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது தொடங்கி தற்போது பொன்முடி வீட்டில் நடக்கும் சோதனை வரை ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று பொன்முடி வீட்டிற்கு உள்ளே நுழைய முயன்ற ஆர் எஸ் பாரதியை சட்டென உங்களுக்கெல்லாம் உள்ளே நுழைய அனுமதி கிடையாது வெளியே செல்லுங்கள் என ஒரே அடியாக மத்திய பாதுகாப்பு படையினர் சொல்ல ஆவேசமாக செய்தியாளர்களை சந்தித்தார் ஆர் எஸ் பாரதி.

திமுக இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கம் இல்லை கர்நாடக மாநிலத்தில் சிவகுமாரை கைது செய்தார்கள் இப்போது என்ன ஆச்சு அது போல் திமுகவும் வரும் என கூறினார் ஆர் எஸ் பாரதி.. ஆர் எஸ் பாரதி எப்படி பொன்முடி வீட்டிற்கு முன்பு ஆவேசமாக பேசினாரோ அதே போல் தான் ஆவேசமாக செந்தில் பாலாஜி வீட்டின் முன்பும் பாஜகவை விமர்சனம் செய்தார் விரைவில் எங்கள் பதிலடியை பாருங்கள் என்றெல்லாம் சவால் விட்டார் ஆனால் இப்போது செந்தில் பாலாஜி எங்கே இருக்கிறார் அதே நிலைமை தான் அமைச்சர் பொன்முடி குடும்பத்திற்கும் வர போகிறதா என புலம்ப தொடங்கி இருக்கின்றனர் உடன் பிறப்புகள்.