
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் கீரனூர் பகுதியில் சிவனே ஒரு மலை ரூபத்தில் அமைந்திருக்கும் கொண்டரங்கி மலை திருவண்ணாமலையைப் போன்று மலையே சிவலிங்கமாக காட்சி அளிக்கிறது. மொத்தம் 3850 அடி உயரம் கொண்ட கொண்டரங்கி மலைக்கு கீழே மல்லி கார்ஜூன சுவாமி திருக்கோவிலூம் மலையின் உச்சியில் சுயம்புலிங்கம் காணப்படுகிறது. ஒருவர் இம்மலையின் உச்சியை அடைவதற்கு 90 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறுகிறார்கள் அதோடு இங்கு உள்ள கட்டிடங்கள் சிற்பங்கள் மற்றும் படிக்கட்டுகள் அனைத்துமே இந்த மலையின் பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. எனினும் இம்மலை மிகவும் செங்குத்தான வழிகளை கொண்டதாக கூறுகிறார்கள் இந்த மழையில் ஏறி வருபவர்கள். அதுமட்டுமின்றி மழை ஏறும் பொழுது ஆரம்பத்தில் சாதாரணமான படிக்கட்டுகள் இருப்பதாகவும் மேலே செல்ல செல்ல படிக்கட்டுகள் இருந்தாலும் அருகில் இருக்கும் கம்பியை பிடிக்காமல் சென்றால் நிச்சியம் கீழே விழுவது போன்ற ஒரு பிரம்மை மற்றும் பதட்டம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் அவை அனைத்தும் சிவபெருமானை நினைத்துக் கொண்டு கடந்து வந்தால் எல்லாமே எளிதாக மாறி மனதிற்கு ஒரு அமைதியும் இயற்கை நிறைந்த காட்சிகளையும் காண முடியும் என்றும் கூறுகிறார்கள். அதோடு இந்த மழையின் உச்சியில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் சிவபெருமானை வழங்கினால் பக்தர்களுக்கு முற்றிலும் மாற்றமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது அர்ஜுனன் தவம் செய்த இடங்களில் ஒன்றாக கொண்டரங்கி மலையும் உள்ளதாகவும் அப்படிப்பட்ட மகிமை கொண்ட இந்த மழையில் அர்ஜுனன் தவம் செய்து சிவனின் அருளை பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சிவனின் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு அர்ஜுனன் தவம் செய்த இடத்தில் நாமும் தவம் செய்தால் சிவனின் அருளைப் பெறலாம் என்றும் கூறுகிறார்கள்.
அதாவது எவர் ஒருவர் இந்த மழையில் தவம் செய்கிறாரோ அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்கிறார்கள் பக்தர்கள்! இது மட்டுமின்றி முருகன் தன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனியில் வந்து காட்சி கொடுக்கும் பொழுது கொண்டரங்கி மலையிலிருந்து தன் தந்தை சிவன் மற்றும் சக்தியை பார்த்ததாக கூறப்படுகிறது, அவர்களும் முருகனை இங்கிருந்து பார்த்ததாகவும் தல வரலாறு கூறுகிறது ஏனென்றால் இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் பழனி மலை தெரியும்!பல முனிவர்கள் சித்தர்கள் தவம் செய்த இடத்தில் காகபஜேந்திரன் மற்றும் கணபதி என்கிற இரண்டு துறவிகள் தங்களின் முன்வினை காரணமாக காகங்களாகப் பிறந்து இந்த மழையில் தங்கி ஈசனை வழிபட்டு முத்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்றளவும் ககபஜேந்திரன் முனிவருக்கு இம்மலையின் உச்சியில் ஒரு சிறிய குகைக்கோயிலும் உள்ளது அதுமட்டுமின்றி பொழுது சாயும் பொழுது கதபஜேயந்தர் சிறிய புயல் வடிவில் இங்கு வந்து சிவனை வணங்கி விட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல மகரிஷிகளால் தியானம் செய்யப்பட்ட இடத்தில் இங்கு வந்த பக்தர்கள் பலரும் அவர்களை கண்டதாக கூறுகின்றனர். எவர் ஒருவருக்கு மன அமைதி வேண்டும் என்கிறார்களோ அவர்களுக்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது. இந்த மலையில் ஏறுவதற்கு வேண்டிய உணவுப் பொருட்களை நாம் எடுத்துச் சென்றாலும் தண்ணீர் எடுத்துச் சொல்ல தேவையில்லை ஏனென்றால் இங்கு பாண்டவர்கள் உருவாக்கிய சுனை உள்ளது. இந்த சுனையில் எடுக்கப்படும் தண்ணீர் மிகவும் சுவையாகவும் அருமருந்தாகவும் உள்ளதாக கூறுவார்கள். மேலும் இந்த மலையின் அடிவாரத்தில் ஸ்ரீ கெட்டி மல்லேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரமராம்பா கோவில் என்ற இரு கோவில்கள் அமைந்துள்ளதாகவும் மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகி விழாக்கள் இம்மலையும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது இந்த ஊற்றில் கிடைக்கும் நீரை தெளித்துக் கொண்டு குடித்து வந்தால் தோல் வியாதிகள் குணமாகும் என்றும் கூறுகிறார்கள். இதற்காகவே இங்கு வரும் பக்தர்களுக்கு இந்த நீரே தீர்த்தமாக வழங்கப்படுகிறது.