
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மதமாற்றத்திற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை குறி வைத்து மதம் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் ஆட்சியை கையில் வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தின் எதிர்பதாகவும் சனாதனத்தை கொடிய நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதும் சனாதனம் என்றால் இந்து மதம் அதனால் தெரியும் இந்து மதத்தை வேறோடு அழிப்பது போன்ற கருத்துக்களை முன்வைத்தது பார்க்கப்படுகிறது. இந்த கருத்து வெளியான பொழுது நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்புகள் வலுப்படுத்தியது குறிப்பாக வட இந்தியாவில் அமைச்ச உதயநிதிக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் கண்டனங்கள் அதிக அளவில் முன்வைக்கப்பட்டதை எடுத்து வழக்குகளும் பதியப்பட்டது இதனால் அரசியல் ரீதியாகவும் திமுக சில சரிவுகளையும் சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கபடுவது திமுகவின் மறுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் என்றும் அதற்கு மக்களின் ஆதரவுகளையும் கேட்டிருந்தார் ஆனால் இந்த பேச்சாளர் அவருக்கு கிடைத்த சரிவுகளும் விமர்சனங்களும் இவரை இதற்கடுத்து சமாதானத்தை குறித்த பேச்சை எடுக்க விடாமல் செய்தது. ஏனென்றால் இந்த விவகாரத்திற்கு பிறகு திமுக இதுவரை கண்டிராத பல சரிவுகளையும் பெற ஆரம்பித்தது சென்னையில் மாநகராட்சி மழையில் மூழ்கியதும் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மூழ்கியதும் திமுகவிற்கு அதிருப்திகள் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குகளால் தனது பதவியை இழந்து வருகின்றனர் அதே சமயத்தில் அவர்களின் ஆட்சிக்கு ஏற்ற வகையிலான சகுன தடைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இப்படி திமுகவின் சரிவிற்கு உதயநிதியின் சனாதன பேச்சு தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் உதயநிதி கடவுள் நம்பிக்கை இல்லை என்று ஒருநாள் கூற மறுநாள் நான் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூற இப்படி தனது பேச்சை மாற்றி மாற்றி பேசி வருவதாலும் திமுக மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி இன்னும் மாறாமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமயத்தை பரப்பவர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்கு மதமாற்றம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. அதே சமயத்தில் முன்பை விட சமூக வலைதளம் மற்றும் பல கோவில்கள் என பொது இடங்களில் இந்து சமயத்தில் முக்கியத்துவங்கள் அருமை பெருமைகள் இந்த சமயத்தில் வழிபடப்படும் கடவுள்களையும் கதைகள் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்த ஒவ்வொரு கருத்துக்களும் அதிக அளவில் பரவுகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் கூட தனது வம்சாவளிக்கு தன் சமயத்தின் அருமை பெருமைகளை கூறி வளர்க்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த சில கும்பலாக சில கிராமங்களுக்கு சென்று மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் இதனை அறிந்த இளைஞர் ஒருவர் எதற்காக இங்கு எல்லாம் வருகிறீர்கள் நாங்கள் எப்பையாவது நீங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து மதமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமா செல்லுங்கள் என அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார்...இதற்கு முன்பாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியானது இந்த நிலையில் தற்போது மீண்டும் இதே போன்ற ஒரு வீடியோ வெளியாகி இருப்பது தமிழகம் முழுவதும் எதற்காக இந்த நடவடிக்கைகள் என்ற ஒரு கேள்வியை முன்வைக்க ஏதுவாக அமைந்துள்ளது.