24 special

சாமானிய மக்கள் வரை பரவிய விஷயம் ....!திமுக ஆடிப்போய் கிடக்கிறது....!

Mkstalin
Mkstalin


பூ கடை நடத்தி வரும் மதுரையை சேர்ந்த இரண்டு சாமனிய பெண்கள் அண்ணாமலை நடை பயணம் குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் எதார்த்தமாக தெரிவித்து இருக்கும் தகவல்கள் தற்போது கடும் அதிர்வலைகளை ஆளும் கட்சியான திமுகவிற்கு உண்டாக்கி இருக்கிறது.


தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அடுத்தடுத்து திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று ஒட்டுமொத்த ஊடகங்களும் அண்ணாமலையின் யாத்திரியை மையமாக கொண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் அண்ணாமலை யாத்திரை தற்போது சாமனிய மக்களையும் சென்று அடைந்து இருப்பது TNNEWS24 சேகரித்த செய்தி மூலம் தற்போது வெளிவந்து இருக்கிறது, அண்ணாமலை நடைபயணம் குறித்து கேள்வி எழுப்ப தம்பி தமிழகத்தில் மாற்றம் வந்தால் ரொம்ப நல்லது அது அண்ணாமலையால் வரட்டும் என ஒருவர் கூறினார், நாங்க இந்த முறை மோடிக்கு ஒட்டு போடுவோம் என எதார்த்தமான குரலில் பேசியவர் முடித்து கொண்டார்.

மற்றொரு பூ வியாபாரம் செய்யும்  பெண்ணிடம் திமுக ஆட்சி குறித்து கேட்க ஐயோ சாமி அதை பத்தி கேட்காத விலை வாசி எல்லாம் ஏறினது தான் மிச்சம் எப்போ பார்த்தாலும் பிரச்சனை 1000 ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு அதிலும் பணம் இல்லை என சொல்றது ஏன் உங்க அப்பாவிற்கு பேனா சிலை வைக்க மட்டும் காசு இருக்கிறதா என கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுகவிற்கு பெரும் அதிர்ச்சி உண்டாகி இருக்கிறது ஒன்று அண்ணாமலை நடை பயணம் சாமானிய மக்களிடம் நேரடியாக சென்று சேர்ந்து இருக்கிறது இரண்டு கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கமட்டும் கையில் காசு இருக்கிறதா என பூ வியாபாரம் செய்யும் பாட்டி முதற்கொண்டு பேசுவது அண்ணாமலை முதலான எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவது சாமானிய மக்கள் மத்தியிலும் எதிரொலிக்க தொடங்கி இருப்பது வரும் தேர்தலில் நிச்சயம் திமுகவிற்கு எதிராக முடியும் என்றே கணிக்க பட்டு இருப்பதால் திமுகவின் அடி மடியே அசைந்து இருக்கிறது.