நடிகர் சூர்யா படத்தில் நடித்து கொண்டே சமூக சேவைகள் பல செய்து வருவதாகவும், தனது அகரம் பவுண்டேஷன் மூலம் படிக்கின்ற குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருவதாகவும் அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் நடிகர் சூர்யா அவ்வப்போது பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து அதனை அடிப்படையாக அரசியலில் அவ்வப்போது கருத்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்..
இது மட்டும் அல்லாமல் தனது படங்கள் வெளியாகும் போது அவ்வப்போது அரசியல் பேசுவார் என்ற கருத்தும் சூர்யா மீது இருக்கின்றது, மேலும் அதிமுக ஆட்சியில் அரசியல் பேசி போராளி நடிகராக திரிந்த சூர்யா திமுக ஆட்சியில் அரசியல் பேசாமல் சத்தமில்லாமல் இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது சூர்யா நடித்து வெளியாக இருக்கும் கங்குவா என்ற படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு உலா வருகிறது.
கங்குவா படத்தில் கிலிம்ப்ஸ் வீடியோவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் இடம்பெற்று இருப்பது பல சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளம்பரம் செய்ததாக நடிகர் சூர்யா மீது பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் என்பது தமிழ்நாட்டின் மிகவும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர், சில குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்த ஒரு விளையாட்டாக இருக்கும் பட்சத்தில் அதனை விளம்பரப்படுத்தி ஒரு வீடியோ வெளிவந்ததும் அதுவும் சூர்யா நடித்துள்ளது பட புரமோவில் இடம் பெற்றிருப்பதும் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறேன் என கூறி விளம்பரப்படுத்தி அரசியல் பேசும் நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை தனது பட ப்ரோமோவில் பயன்படுத்தி காசுக்காக இதனை செய்துள்ளார் என பலரும் விமர்சித்துவருகின்றனர். மேலும் இந்த வீடியோ 2 கோடி பார்வையாளர்களை கடந்து சமூக வலைதளத்தில் வைரலாக உலாவருகிறது. இப்படி 2 கோடி பேர் பார்த்த கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் முதல் மூன்று நொடிகளுக்கு ஆன்லைன் சூதாட்டம் இடம் பெறுவதால் அந்த விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் பாதிக்க படுவார்கள் என்பதை பற்றி யோசிக்காமல் நடிகர் சூர்யா தரப்பு காசுக்காக இதனை செய்துள்ளதாகவும், சூர்யா போடுவதெல்லாம் வெளிவேஷம் எனவும் அரசியல் ரீதியாக தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ஏற்கனவே எளிய அரசுப்பள்ளி மாணவர்களை வெளியே நிற்கவைத்து குடும்பத்துடன் சொகுசாக கீழடி அருங்காட்சியகத்தில் சுற்றி பார்த்ததும், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆட்சியில் குரல் கொடுத்துவிட்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் அது பற்றி பேசாமல் இருப்பது நடிகர் சூர்யா நிஜ வாழ்கை நடிகர்தான் என பேசப்பட்டு வந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்ட கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவால் எத்தனை சிறுவர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை பலரது ஆதங்கமாக இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் இவ்வளவு தீமைகள் இருக்கும் பட்சத்தில் நடிகர் சூர்யா அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் காசுக்காக இதனை செய்திருப்பது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகி உள்ளது.
சூர்யாவின் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்ததுக்கே மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் பட வெளியீட்டின் போது என்னென்ன பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது என படக் குழுவினர் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன