நம்ம தமிழ்நாட்டுல எது சரலமா கிடைக்குதோ இல்லையோ இந்த மது கஞ்சா இதுலா ரொம்ப சுலபமா கிடைக்குது... அந்த அளவுக்கு இருக்கு ஆட்சி.. இந்த மது உள்ள போனா மனிதர்கள் மிருகமாக மாறுகிறார்கள்.. சர்வ சாதாரணமாக கொலை கொள்ளை நடக்கிறது.. அப்படித்தான் இங்கும் நடந்துருக்கு...சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே மேம்பாலம் அடியில் மூன்று சடலங்கள் இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னன் தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.
மேம்பாலத்தின் அடியில் கடும் துர்நாற்றம் வீசவே இன்று தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார் ஒரு சடலம் இருந்ததால் ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.போலீசார் நேரில் வந்து பார்த்தபொழுது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணின் சடலமும் கிடந்தது.அருகே மது பாட்டிலும் தண்ணீர் இருந்த நிலையில் அருகே ரத்தம் உறைந்து காணப்பட்டது. மூவரும் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை.சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது மர்மமாக உள்ளது. இன்னும் எத்தனை பேரை இரக்கமில்லாமல் கொல்லப்போகிறார்களோ...இந்த போதையர்கள்....