பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்திய நிலையில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மிக எளிமையாக, உடல் அஞ்சலிக்கு வைக்க படாமல் உடனுக்குடன் மாயணத்தில் தகனம் செய்யப்பட்டது, இதற்கு இரண்டு கரணங்கள் கூறப்படுகின்றன ஒன்று பிரதமர் மோடியின் சமுதாய வழக்கம் என்றும் மற்றொன்று பிரதமர் மோடி குடும்பம் எடுத்த முடிவு என்று கூறப்படுகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் அதிகாலை உயிரிழந்தார் என்று தகவல் வெளியானது . தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், பிரதமர் மோடி வந்தவுடன் விரைவாக குடும்ப உறுப்பினர்கள் துணையுடன் மையானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது, மோடி தனது தாயர் உடலை அடக்கம் செய்ய தோளில் சுமந்து சென்றார்.
உடனக்குடன் அவரது உடல் எரியூட்டபட்டது, இதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது ஒன்று உலகில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் அஞ்சலி செலுத்த நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வருவார்கள் என்ற காரணத்தால் அது பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்ற காரணத்தால் விரைவாக அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த சமுதாயத்தில் உடனுக்குடன் தகனம் செய்யும் நடைமுறை இருப்பதால் அதனை மீற கூடாது என பிரதமர் மோடியின் குடும்பத்தார் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.