நேற்று தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் 100கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் படம் வெளியான உடன் ரிவியூ கொடுப்பது வழக்கமாக ஒன்றாக மாற்றியுள்ளது. யூடியூப்பில் ரிவியூ கொடுப்பவர் வரிசையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் ஆளாக இருப்பவர் ப்ளூசட்டை மாறன். இவரின் ரிவியூ பார்த்து விட்டு தான் படத்தை பார்க்கலாமா, வேணாம் என்று முடிவை எடுப்பார்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் லியோ படத்திற்கு ரிவியூ கொடுத்துள்ளார். "வழக்கமாக படத்தின் கதை இதுதான் என சொல்லிவிட்டு வீடியோ கேமில் எல்லாரையும் பொட்டு பொட்டுனு சுடுற மாதிரி வந்த 1000 பேரையும் அசால்டா சுடுறாரு விஜய்.
அதில் தன் கூட கடைசியில் யார் பேசனுமோ அவன மட்டும் விட்டு மத்த எல்லாரையும் சுட்டு தள்ளுறாரு.ஒரு படத்திற்கு கூடுதல் பலமே வில்லன்தான். அவனையும் இந்த படத்தில் டம்மியா காட்டியிருக்கிறாரு லோகேஷ். புத்திசாலியா இல்லனா கூட பரவாயில்ல. முட்டாள் பயலாக இருக்கிறான். மூட நம்பிக்கை உள்ளவனாக நரபலி கொடுக்கிறவன இருக்கான். இதுல LCUனு உள்ளே வராரு கமல். என்ன கதை ஓடிக்கிட்டு இருக்குனு தெரியாமலேயே வா என்கூட வந்து சேர்ந்துரு. ஒட்டுமொத்த போதை பொருளையும் அழிச்சிடலாம் என கூப்பிடாரு. ஆனால் இங்க நடந்த கதையே வேற.விஜய் வைத்திருந்த காஃபி கடையை அடிச்சி நொறுக்கிட்டாங்க. வேற என்ன பண்ணலாம். கஞ்சா விக்க போலாமானு விஜய் யோசிச்சிட்டு இருக்கும் போது என் கூட வந்துருனு ஒரு கேரக்டரு ஒலறிகிட்டு இருக்கு என கமல் கேமியோவை கிண்டலடித்து பேசியிருக்கிறார்.
படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அந்த ஹைனாவுக்கு செய்த கிராஃபிக்ஸ் நம்பும் படியாக இருந்தது. ஆனால் இதுதான் கஷ்டமான விஷயம். இத நல்லா பண்ணிட்டாங்க. ஆனால் கார் சேஸிங்லாம் வச்சிருந்தாங்க. அதுல கோட்ட விட்டாங்க. இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் தங்களுக்குண்டான சம்பளத்தை எடுத்துக்கிட்டு மீதமுள்ள பணத்தில் தான் படத்தை எடுத்திருப்பாங்க போல.படத்தின் டைரக்டர் லோகேஷ் ஒரு பேட்டியில் என் வாழ்நாளில் 10 படத்திற்கு மேல பண்ணமாட்டேனு சொல்லியிருக்கிறாரு. இது அவருக்கு 5வது படம். இந்தப் படமே கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி அதற்கு குறியீடா ஆரம்பத்திலேயே கழுதைப் புலியை காட்டியிருக்காரு.இந்தப் படத்தை பார்த்தாலே தெரியுது.
இவர் வாழ்நாளில் கைதி படத்தை மாதிரி இன்னொரு படத்தை கொடுக்க சாத்தியமே இல்லனு. இதுல அடுத்து நம்ம தலைவரை வச்சு வேற படம் எடுக்க போறாரு லோகேஷ். இன்னிக்கு நம்ம ஏரியால தலைவர போடுறதுக்கு ஷார்ப்பான புள்ளி லோகேஷ் தான். இதே ஃபார்மோட போயி தலைவர அட்டாக் பண்ணிடுங்க என ப்ளூசட்டை மாறன் கழுவி கழுவி ஊத்தியிருக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த ரசிகரக்ள் ப்ளூசட்டை மாறன் விடியோவிற்கு நீங்கள் எல்லா படத்திற்கும் இது போல தான் சொல்றிங்க, நீங்கள் எடுத்த படத்தை நாங்கள் கழுவி ஊத்தினோமே என்று திட்டி வருகின்றனர். ஆனால், விஜய் படம் விடுமுறை நாளை முன்னிட்டு வசூல் சாதனையை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.