2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடு தேர்தல் பரபரப்பில் சற்று தணிந்துள்ளது. மேலும் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் இருவருமே இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதாவது பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு லோக்சபா தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிந்த பிறகு பிரதாப்கர் மற்றும் கேதநாத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அதேபோல இந்த முறையும் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் ஓய்ந்துள்ள நிலையில் மூன்று நாள் பயணமாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு வருகை புரிந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நடுக்கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதம நரேந்திர மோடி 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு பணிகள் அனைத்தும் தீவிரப்பட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் கன்னியாகுமரி கடற்கரைக்கும் மூன்று நாட்களுக்கு யாரும் செல்லக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய வருகை தர உள்ளார் என்ற செய்திகள் வெளியானதிலிருந்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்கக் கூடாது என்று விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் முன்வைத்து வந்தனர்.
ஆனால் தியானம் மேற்கொள்வது என்பது தேர்தல் விதி மீறலும் கிடையாது அனைவருமே தியானம் மேற்கொள்ளலாம் நாளை நீங்களும் மேற்கொள்ளலாம் என்ற வகையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திமுகவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்யகிரீஸ்வரர் ஆலயத்திற்கும் கோட்டை பைரவையும் வழிபட்டு டெல்லி திரும்பி உள்ளார். அதாவது வாரணாசியில் இருந்து இன்று மாலை 3 மணி அளவில் தனி விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்தை அடைந்த அமைச்சர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்து அங்கிருந்து காரில் திருமயம் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
இப்படி பாஜகவின் மூத்த அமைச்சர்களும் நாட்டின் மிக முக்கிய தலைவர்களுமான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்திற்கு ஒரே தினத்தில் வருகை புரிந்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அதே சமயத்தில் இருவரும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும், இந்த தேர்தலில் தமிழகத்தில் நமக்கு வாக்கு வங்கி அதிகரித்திருக்கும், அதனால் இதனை வைத்து அடுத்து இரண்டு வருடங்களில் தமிழகத்தை மிக முக்கிய கவனத்தில் நாம் எடுத்துக் கொண்டு 2026 ஆம் ஆண்டில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்கினை தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு கூறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் நமது பணி எல்லாம் முடிந்து விட்டது என்று திமுகவின் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் கூட சுற்றுலா பயணத்திற்கு சென்று விட தற்போது நாடு முழுவதும் தேர்தல் முடியும் வரை தனது கவனம் மொத்தத்தையும் களத்தில் செலுத்தி விட்டு தற்போது ஆன்மீகப் பயணங்களை பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் இருவரும் மேற்கொள்ள அதிலும் தமிழகத்தில் மேற்கொண்டது தமிழக மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் திமுகவின் பின்னடைவு மேலும் அதிகரிக்குமோ என்ற பேச்சுகள் தற்போது உலா வருகிறது. மேலும் இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தை குறிவைத்தே டெல்லியின் அதிரடி மூவ் இருக்கும் என தகவல்கள் கசிகின்றன...