Technology

தமிழகத்திற்கு தரமான செய்கை செய்த மத்திய அரசு! சென்னை டூ தூத்துக்குடி இனி 6 மணி நேரம் தான்! வருகிறது பிரமாண்ட எக்ஸ்பிரஸ் வே!

Grand Express
Grand Express

பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக அரசு தாக்கல் செய்த  மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிக்காக ரூபாய் 2.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது கடந்த 2023-ம் ஆண்டு எவ்வளவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு செலவினம் செய்யப்பட்டுள்ளது. எந்த வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விரிவான விவரங்களை நிதி அமைச்சர் வெளியிட்டிருந்தார். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதிவியேற்றத்திலிருந்து நாட்டின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதில் முக்கிய  கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதி தான்பாரத் மாலா பரியோஜனா என்ற திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதலாக துவக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பாதுகாப்பான மற்றும் வசதிகள் நிறைந்த சாலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டது.


ஒரு நாட்டின் வளர்ச்சி அங்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சாலை வசதிகள். அந்த வகையில் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி மொத்தம் 5173 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அதாவது பெரும்பாலும் ஆறு வழி அல்லது எட்டு வழி சாலைகளான எக்ஸ்பிரஸ் வே அமைந்துள்ளது.மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவு படுத்துதல், புதிய நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகள் அமைப்பது, எக்ஸ்பிரஸ் வே போன்ற சாலைப் பணிகளில் மத்திய அரசு அதிக முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை-தூத்துக்குடி இடையே பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வெறும் 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு வேலைகளைகளை தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு மேலும் சென்னை பெங்களுரு விரைவு சாலை முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது சென்னை-தூத்துக்குடிக்கு வெறும் 6 மணி நேரத்தில் செல்லும் விதமாக மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே திட்டத்தை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அ நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

வேலைகள் சற்று மந்தமாகவே உள்ளது. ஏனென்றால் மாநில அரசின் ஒத்துழையாமை நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக உள்ளது. இதனால் தமிழகம் பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக சென்னை சேலம் இடையே எட்டு வழி சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை தூண்டிவிட்டது இதனால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத் மாலா பரியோஜன இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வே வழித்தடத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

இது மட்டுமில்லாமல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் சுமார் 6,747 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் சாலைகள் இடைவழிச் சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி உள்ளது. இதில் தமிழகத்திற்கான திட்டங்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வே மொத்தம் 606 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து திண்டிவனம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் அரியலூர் செங்கிப்பட்டி புதுக்கோட்டை பிள்ளையார்பட்டி இடையே தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல கிட்டத்தட்ட 9 மணி நேரம் 59 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த எக்ஸ்பிரஸ் வே வந்தால் சென்னையில் இருந்து தூத்துக்குடி வெறும் ஆறு மணி நேரத்தில் அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.