24 special

கடந்த வருடம் நடந்த அதே தினத்தில் மீண்டும் ஒரு ரயில் விபத்து...! மர்மம் என்ன...?1

Train
Train

நாட்டின் எங்கோ ஒரு மூலையில் ஏதேனும் ஒரு விபத்து அல்லது கொலை நடந்தால் அந்த அசம்பாவிதம் நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் தள்ளியதோடு ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தி விடும். அப்படித்தான் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற ரயில் விபத்து இந்திய நாட்டையே உலுக்கியதோடு நாட்டு மக்கள் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. அதாவது கடந்த வருடம் ஜூன் இரண்டாம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மீதுஷாலிமர் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் மோதியது.. அதே சமயத்தில் கோரமண்டல் விரைவு ரயில் மோதிய பொழுது அதன் எதிர்த்துசையில் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டி விபத்தில் சிக்கி தடம் புரண்டு கோர விபத்தை ஏற்படுத்தியது.


இந்த விபத்து ஏற்பட்டதற்கு சிக்னல் கிடைக்காததும் மற்ற சில விஷயங்களும் காரணமாக கூறப்பட்டாலும் இந்த விபத்து  அலட்சியத்தால் ஏற்பட்டது என ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்த விபத்தில் 295 பேர் உயிரிழந்து 1100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணைய இந்த விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு 40 பக்க அறிக்கையையும் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையில் தவறான வயரிங், கேபிள் இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்தது. இதுவே ரயில் விபத்து ஏற்பட காரணம் என்றும், மனித தவறுகளாலும் விபத்து நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஐ தனியாக மேற்கொண்டு ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார்மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய மூன்று பேரின் மீது குற்றவியல் சட்டம் 304 மற்றும் 201 ஆகிய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்த பதட்டம் ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து தங்கள் உறவினர்களையும் பெற்றோர்களையும் பலர் இதில் இழந்ததும் பலர் மனதையும் கலங்கடித்தது. இன்றும் இந்த விபத்தை நினைக்கும் பொழுது ஒரு நிமிடம் கடவுளிடமும் அல்லது நாம் நம்பும் சக்திடமும் வேண்டுவது பலக்கமாகி போனது! இந்த நிலையில் கடந்த வருடம் நடந்த அதே விபத்து போன்று இந்த வருடமும் அதே தேதியான ஜூன் இரண்டாம் தேதியில் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் இரண்டாம் தேதி காலையில் பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மற்றொரு ரயில் பின்னால் நிறுத்தியதில் இரண்டு லோகோ பைலட்டுகளும் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த இரண்டு லோகோ பைலட்டுகள் ஸ்ரீ ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் சிவில் மருத்துவமனை டாக்டர் எவன்ப்ரீத் ரயில் விபத்தில் காயமடைந்த இரண்டு லோகோ பைலட்டுகளும் ராஜேந்திரா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் உத்திரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் வசிப்பவர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு விபத்தை நினைத்தாலும் இன்றும் மனதில் எழும் அச்சம் நீங்காமல் உள்ள நிலையில், கடந்த வருடம் விபத்து நடந்த அதே தினத்தில் இந்த வருடமும் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்னால் இருந்து மோதியதில் இரண்டு லோகோ பயிலட்டுகளும் காயம் அடைந்துள்ள செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.*