Cinema

யார் இந்த பாடகி!! இணையத்தை பற்றவைத்த அந்த வைரல் காட்சிகள்....

Shaktisri
Shaktisri

வார்த்தையால் கூற முடியாததை மௌனத்தால் கூறி விடலாம் என்றும் மௌனத்தாலும் சிலருக்கு புரியாததை பாடல்கள் மூலமே உணர்த்த முடியும் என்பது காதலை விழுந்தவர்களுக்கும், காதலி தோற்றவர்களுக்கும், நட்பின் திளைத்தவர்களுக்கும், பெற்றோர்களின் பாசத்தில் மூழ்கடிக்கப்பட்டவர்களுக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இசையாலும் பாடலாலும் மொத்தமும் மூழ்கி இருக்கும் இந்த இணையதள உலகில், பாடல்கள் கேட்பது மட்டும் மாறாமல் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த பாடகர்கள் வரிசையில் சக்தி ஸ்ரீ கோபாலன் என்ற பெண் பின்னணி பாடகி தனது பாடல் மூலம் இனிமையான குரல் மூலமும் அனைவர் மனதையும் தன் நெஞ்சுக்குள்ளே வைத்துள்ளார், அனைவர் மனதையும் கட்டி போட்டுள்ளார் என்று கூறுவதற்கு பதிலாக நெஞ்சுக்குள் வைத்துள்ளார் என்று நான் கூறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் இவர் முதல் முதலாக சினிமா துறையில் ஒரு பாடகராக அறிமுகமான பாடல் நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் என்ற பாடல்கள் மூலம்தான் இன்று வரை பலரின் பேவரட் பாடல்கள் லிஸ்டில் இந்த பாடல் இல்லாமல் இருக்காது. 


கேரளாவின் கொச்சியில் பிறந்து வளர்ந்த சக்திஸ்ரீ கல்லூரி படிப்புக்காக சென்னைக்கு குடிபெயர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் கட்டிடக்கலை பட்டத்தையும் பெற்றவர். இருப்பினும் தனது சிறுவயதில் முதல் பாடல் மீது கொண்ட ஆர்வத்தால் கர்நாடக இசையில் 13 ஆண்டுகள் பயிற்சி பெற்று தனது பதினொன்றாம் வகுப்பிலே  எஸ் எஸ் மியூசிக் குரல் வேட்டை சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். இருப்பினும் அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால் அந்த முயற்சி குரல் தேர்விலே முடிந்து போனது. அதற்குப் பிறகும் 2008ல் எஸ் எஸ் மியூசிக் குரல் வேட்டையில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டிலேயே டாக்ஸி 4777 என்ற படத்தில் பாடும் வாய்ப்பினை பெற்றார்.

இருப்பினும் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளியான கடல் திரைப்படத்தில் நெஞ்சுக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன் என்ற பாடல் மூலமே பல ரசிகர்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கற்றது களவு போன்ற பல படங்களில் பாடும் வாய்ப்பு சக்தி ஸ்ரீயை தேடி வந்தது. மேலும் சமீபத்தில் சத்யஸ்ரீயின் குரலில் வெளியான நான் நீ நாம்,  ரயிலின் ஒலிகள், அகநக முகநக, யாஞ்சி, நெஞ்சமே நெஞ்சமே, மையல் கொண்டேன், நினைவிருக்கா போன்ற பாடல்கள் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை தன் பக்கம் திருப்பியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்துமே மக்களை பல நேரங்களில் லூப்பிற்குள் சிக்க வைத்து உள்ளது. 

இப்படி தனது பாடல்கள் மூலமும் குரல் மூலமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற பாடகி சக்திஸ்ரீ சமீபத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது இவரின் குரலை பார்த்து பலரும் இவர்தான் உண்மையில் இந்த பாடல்கள் அனைத்தும் பாடினாரா என்ற வகையில் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சமூக வலைதளங்களில், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் சக்தி ஸ்ரீ பேசிய வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில் அன்று நாடகக் கலையாக அறியப்பட்ட அனைத்தும் தான் இன்று பாண்ட், ஸ்டேஜ் ஷோஸ், கான்செட்டாக மாறி உள்ளது. இந்த மாற்றம் புதிய மாற்றம் மட்டுமே அதைக் ஏற்கும் வகையில் நாமும் மாறிக்கொண்டிருக்கிறோம். மற்றபடி பாடல்கள் என்றுமே உலகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றோடு ஒன்று இணைக்கிறது என அருமையாக பேசியிருந்தார் ஆனால் இதை பேசியது சக்தி ஸ்ரீதானா என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.  

ஏனென்றால் இதுவரை இவரது குரலை பாடலாக மட்டுமே கேட்ட பலர் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவரின் பேச்சுவழக்கில் கேட்கும் பொழுது ஒரு ஆண் குரல் போன்று இவரது பேச்சு குரல் இருப்பதை கேட்டு, உடனடியாக அவர் நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் என்ற தனது முதல் பாடலை பத்திரிகையாளர் சந்திப்பில்  பாடிய பிறகு நிஜமாவே இவர் பெண் பாடகரா பல விமர்சனங்களையும், இவர் பேசுவதை விட பாடுவதுதான் இன்னும் இனிமையாக இருக்கிறது என கமெண்ட்களும் எழுந்து வருகிறது.