24 special

அண்ணாமலை பற்றி முக்கிய ட்வீட் ! யாரும் எதிர்பாராத திருப்பம்..!

Annamalai
Annamalai

பாஜக மீதும் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை மீதும் ஊடகங்கள் கட்டம் கட்டி செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், மோடியின் வலது கரம் என கூறப்படும் முக்கிய தலைவர் அண்ணாமலை குறித்தும் பாஜகவின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் தெரிவித்த கருத்து தொடர்ச்சியாக பாஜகவை எதிர்க்கும் நபர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


இது குறித்து அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் எங்கு எப்போது என்ன நடந்தது என்ற தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார், கடந்த மாதம் 5 ந்தேதி டெல்லியில் பாஜக உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.இந்தியா முழுக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.தமிழகத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்..

அந்த நேரத்தில் சுனில் ஓசா என்பவர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.அண்ணாமலையோடு பேசிய சிறிது நேரத்தில் நான் புரிந்து கொண்டது அவரது தலைமையில் தமிழக பாஜக மாபெரும் வளர்ச்சி பெற்று, நாகரிகமும் - கலாச்சாரமும் கொண்ட வளர்ச்சிப் பாதையில் தமிழகம் அவரின் கீழ் பொலிவுறும் என்று பாராட்டியிருந்தார்..

அதற்கு பதிலாக குஜராத்தி மொழியில் அண்ணாமலை,"உங்களைப் போல மதிப்புமிக்க மூத்தவர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு தரும் வழிகாட்டுதல் வெளிச்சம் மற்றும் இந்த அன்பிற்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்..அதை ரீடிவிட் செய்த ஓசா,எனக்கு குஜாராத்தியில் நீங்கள் கொடுத்த பதிலே,ஒரு வலுவான அடித்தளமானது தமிழகத்தில் உங்கள் தலைமையில் பாஜகவிற்கு நிறுவப்படும் என்ற என்னுடைய எண்ணத்தை இன்னும் பலமாக்குகிறது என பதிவிட்டிருந்தார்.

யார் இந்த சுனில் ஓசா என்பது மிக முக்கியமானது..நரேந்திர மோடி - பிரவீன் தொக்காடியா - சுனில் ஓசா இவர்கள் மூவரும் குஜராத் இந்துத்துவ அரசியலில் பலமான படைத் தளபதிகளாக இருந்தவர்கள்.போராட்டங்கள்,ஆள்திரட்டல் என கட்சியின் தார்மீக பலமாக இவர்களுடைய உழைப்பு இருந்தது..களத்திலிருந்து எழுந்து வந்த தலைவர்கள்..

இதில் ஓசா இதழியல்,கருத்தியல்களை உருவாக்குபவர்.தேர்தல் அரசியலில் மிகச்சிறந்த வியூகங்களை வகுப்பவர்.இரண்டுமுறை குஜராத் MLA வாக இருந்தவர்.ஆனால் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு மிகப்பெரிய ஈகோ யுத்தம் அமைப்பில் உருவானது..அங்கே தங்களுக்கு இல்லாத தகுதி மோடிக்கு இருந்தது என்ன என்ற ஆற்றாமை கடுமையாக எழுந்தது.மோடியை எங்களால் முதுகில் குத்தி வெளியே தள்ள முடியும் என்ற ஆணவமும்,வெறுப்பும் சூழ்ந்தது.

அது தொக்காடியாவையும்,ஓசாவையும் நரேந்திர மோடியை விட்டு தள்ளிப்போக வைத்தது.அவருக்கு எதிராக செயல்பட வைத்தது.கோர்த்தன் ஜடாஃபி,அரவிந்த் ராணா என பெரிய அணி மோடிக்கு எதிராக மகாகுஜராத் ஜனதா கட்சியை நடத்தினார்கள்..அதற்கு அடித்தளமாக தொக்காடியாவும்,ஓசாவும் செயல்பட்டார்கள்.ஆனால் மோடியை எதனாலும் வீழ்த்த முடியவில்லை.

மோடியை விட தாங்கள் பெரிய இந்துத்துவவாதி என்று காட்ட இவர்கள் எடுத்த எல்லா அஸ்திரங்களும் வீழ்ந்தன.கருத்தியல்,அரசியல் வியூகம் என எல்லாவற்றிலும் மோடிதான் வென்றார்..ஆனால்,ஓசாவை மோடி மதித்தார்..ஓசாவுக்கு இருக்கும் இந்துத்துவ உணர்வும்,மக்களின் நாடித்துடிப்பை அறியும் அவர்களை ஒரு பக்கமாக திரட்டும் அறிவுத் திறமையும் மோடியால் பெரிதும் மதிக்கப்பட்டது.2007 ல் பாஜகவை விட்டு விலகிய ஓசாவை 2011 ல் மீண்டும் பாஜகவிற்கு கொண்டு வந்தார் மோடி..

2013 ல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் ஓசாவை வாரணாசி அனுப்பினார் மோடி..அந்த தொகுதியை மோடிக்காக தயார் செய்தது ஓசா என்பது மறுக்க முடியாத உண்மை.தன்னுடைய மனசாட்சியாக வாரணாசி தொதியில் இன்று வரை அங்கே ஓசாவைத்தான் மோடி நியமித்து வைத்திருக்கிறார்..மோடி மனதால் நினைப்பதை செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர்..தன்னை எதிர்த்தாரே என்றெல்லாம் மோடி அவரை ஒழிக்க நினைக்கவில்லை.அவருடைய அசாத்திய உழைப்பையும்,அறிவையும் தனக்கும் கட்சிக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்..

ஆட்களை எடைபோடும் தகுதி அரசியலில் மிக முக்கியம்.அதை ஆழமாக தெரிந்த இருவரும் கடந்த கால கசப்பை மறந்துவிட்டார்கள்.அந்த உணர்வு இருபக்கமும் உருவாகி பொதுப்புள்ளியை அடைய வேண்டும்.நிற்க.அப்படிப்பட்ட சுனில் ஓசா..அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழகத்தில் பாஜக வளரும்,என்னுடைய கணிப்பு தவறாது தமிழகத்தை அண்ணாமலை வழிநடத்துவார் என்று சொல்லும் செய்தி எளிமையானது இல்லை..என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் சோழன்.