தனியார் ஊடகம் மற்றும் பாஜக இடையே நடைபெற்ற விவாதம் மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ள....நிலையில் இதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது, இந்த சூழலில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இன்று நடந்த விவாகரம் குறித்து பொது வெளியில் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு : நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை என்னை பணித்திருந்தார்.
இன்று மாலை 7 மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார்.
ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.
பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை. எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என நேரடியாக குறிப்பிட்டு இருக்கிறார் நாராயணன் திருப்பதி.இதன் மூலம் உண்மையில் யார் பல்டி அடித்தது என்பது தெளிவாக தெரிவதாக மக்கள் பலர் கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர்.