சென்னை பெரியமேடு பகுதியில் ஒரு நடுத்தர வயது பெண்மணி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு சிறுவன் வாகனத்தை நிறுத்த சொல்லி சமிக்ஞை செய்தான்.வாகனத்தை நிறுத்தியவர் அந்த சிறுவனிடம் விசாரித்தார்."என்னால் பசி தாங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுங்கள்" என கண்ணீர் மல்க கேட்டிருக்கிறான்.
அந்த பெண்மணியும் உணவுப்பொட்டலத்தை வாங்கிக் கொடுத்து சிறுவனின் தாய் தந்தையர் பற்றி விசாரித்திருக்கிறார்.அந்த சிறுவனின் குடும்பம் பெரியமேடு நடைபாதையில் வசித்து வருகிறது.பெற்றோர் இருவரும் தினக்கூலிகளாவர்.இந்த ஊரடங்கு இவர்களை பட்டினிக்குள்ளாக்கியது வேதனையின் உச்சம்.
அந்த சிறுவன் வேப்பேரி டான் போஸ்கோ பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை நிறுத்தியதாலும் ஊரடங்கினால் வருமானம் இல்லாததாலும் இவனை போன்ற சிறுவர்கள் தமிழகமெங்கும் பிச்சையெடுக்கும் அவல நிலையே காணப்படுகிறது.
டான் பாஸ்கோ பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜெயா இந்த சம்பவம் பற்றி குறிப்பிடுகையில் "எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. அந்த சிறுவன் மிகவும் நன்றாக படிக்க கூடிய சிறந்த மாணவன்" என்று கருத்து தெரிவித்தார்.
"மே மாதம் முதலே மதிய உணவு பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது.இந்த முறை குழந்தைகள் பசியுடன் பிச்சையெடுக்கும் அவலத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவ தமிழக திமுக அரசு சார்பான அமைப்பு எதுவும் இல்லை" என K.சண்முகவேலாயுதம் (Convenor of Tn forces) தெரிவித்தார்.
சேப்பாக்கம் கழிவறையை விட்டு உதயநிதி எப்போது எங்களை கவனிப்பார் என நடைபாதை வாழ் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
...உங்கள் பீமா