24 special

எகிறி அடிக்கும் பிஜேபி..! கைகொடுத்த தேர்தல் முடிவுகள்..?

Modi , amitsha , yogi adityanath
Modi , amitsha , yogi adityanath

புதுதில்லி : உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த இரண்டு மக்களவை தொகுதியில் பிஜேபி வெற்றி பெற்றிருந்தாலும் சங்ரூர் நாடாளுமன்ற தொகுதியை எஸ்ஏடியிடம் பறிகொடுத்துள்ளது. அதேநேரத்தில் திரிபுராவில் நடைபெற்ற நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளை பிஜேபி கைப்பற்றியுள்ளது.


கடந்த 23ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் ஐந்தை பிஜேபி கைப்பற்றியுள்ளது. ஐந்து மாநில இடைத்தேர்தல் மற்றும் டெல்லியில் மூன்று மக்களவை மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாடியின் கோட்டையாக கருதப்படும் இரண்டு தொகுதிகளை பிஜேபி தட்டி தூக்கியுள்ளது. 

அதேபோல் திரிபுரா முதல்வர் மாணிக் சஹாவின் முதல் தேர்தலான இந்த நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மூன்றை வென்று தனது பலத்தை நிரூபித்துள்ளார். பஞ்சாப்பில் நடந்த இடைத்தேர்தலில் சங்ரூர் தொகுதியை சிரோன்மணித்தளத்திடம் ஆம் ஆத்மீ பறிகொடுத்துள்ளது. ஆனால் ராஜிந்தர் தொகுதியை தன்வசப்படுத்திக்கொண்டது. இந்த இருதொகுதிகளிலும் பிஜேபி தோல்வியடைந்துள்ளது.

சிபிஐஎம் மற்றும் திரிணாமூல் திரிபுரா தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல அகர்தலா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான சுதீப் ராய் பர்மன் 43.46 சதவிகித ஓட்டுக்களை பெற்றுள்ளார். இவர் தான் தேர்தலுக்கு இருநாட்களுக்கு முன்னர் மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும்நிலையில் வெளிவந்திருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.உத்திரபிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சட்டப்பேரவையில் பிஜேபியின் பலம் தற்போது கூடியுள்ளது கவனிக்கத்தக்கது. 

ஆந்திரா அத்மகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் வேட்பாளரான மேகபதி விக்ரம் ரெட்டி 82,888 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பிஜேபி வேட்பாளரான ஜி.பாரத் குமார் யாதவ் வெறும் 19,353 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜார்கன்ட் மாநிலம் மந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்கி 23000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி வேட்பாளரை தோற்கடித்து நீண்ட காலங்களுக்கு பிறகு முதல்வெற்றியை பதிவுசெய்துள்ளது.