
மக்கள் நீதி மையத்தில் இருந்த பத்மாபிரியா என்ற பெண் திமுகவில் சேர்ந்த நிலையில் அப்போதே மக்கள் நீதிமய்யம் மற்றும் திமுகவினர் இடையே சமூக வலைத்தளங்களில் உறசல் உண்டானது, போதத குறைக்கு கமலின் வலது கரமாக இருந்த டாக்டர் மகேந்திரனும் திமுகவில் இணைந்தார்.
அப்போது பெரும் சர்ச்சை ஓடிய நிலையில் கமல் ஹாசன் எந்த பதிலும் கொடுக்காமல் கடந்து சென்றார் தற்போது அதே கமல் ஹாசன் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு இலவசமாக கார் வழங்கிய சம்பவதின் பின்னணியில் பல நாள் அரசியல் கணக்கு இருப்பதாக கூறுகின்றனர் தற்போதைய சடு குடு ஆட்டத்தை பார்ப்பவர்கள்.
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை கடந்த வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது பேருந்தில் பயணச்சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷர்மிளா பணியில் இருந்து வெளியேறியதாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பலராலும் பாராட்ட ஷர்மிளா இதனால் வேதனை அடைந்தார். ஓட்டுநர் ஷர்மிளாவை பணியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை என்று தனியார் பேருந்து நிறுவனம் கூறியது.
இந்நிலையில் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மாற்று வேலை உறுதி என கனிமொழி எம்.பி. கூறினார். இந்நிலையில்தான் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், கமல் பண்பாட்டு மையம் சார்பில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
மேலும் 'தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தற்போது வாடகை கார் ஓட்டுநராக ஷர்மிளா தொழில் முனைவோர் அவர் தனது பயணத்தைத் தொடரவிருக்கிறார். அவர் பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நம்பிக்கை' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
கமல் வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும், அதற்கு ஷர்மிளா போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமான நபர்கள் தேவை என்பதால், ஷர்மிளாவவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தி கொள்ள கமல் கணக்கு போட்டு காய்கள் நகர்த்தி இருக்கிறாராம்.
அதே நேரத்தில் கட்சியில் இணைந்தால் விஸ்வாசமாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தேர்தல் முடிந்த மறு கணமே கட்சி மாறிய பத்மப்ரியாவிற்கு ஷர்மிளா மூலம் பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி இருக்கிறார்களாம்.
கமல் முடிவு எடுத்து இருப்பதாக பல தகவல்கள் பரவினாலும் என்னதான் சமூக வலைத்தள பிரபலம் என்றாலும் அவர்கள் வாக்கு கேட்டு சென்றால் மக்கள் வாக்கு எல்லாம் போட மாட்டார்கள் வேண்டும் என்றால் ஒரு லைக் அதிகமாக விழும் அவ்வளவுதான் என கிண்டல் செய்கின்றனர் எதிர் தரப்பினர்.