இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழன்னை புகைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் மோகன் ஜி செம்ம கலாய் கலாய்த்து இருக்கின்றார். நடந்தது என்ன இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல இசை அமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் பிறந்தது இந்து மதத்தில். ஆனால் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இது அவரது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அனைவரும் போற்றி வரக்கூடிய தமிழன்னையை, பார்க்க சகிக்காத வடிவில் டிசைன் செய்து அதுவும் குறிப்பாக கருப்பு சிகப்பு நிறத்தில் திமுக கொடி கலர் காம்பினேஷனில், தலைவிரி கோலமாக ஒரு சில பேய் படங்களில் காண்பிக்கப்படும் பெண் பேய் போன்று தமிழன்னையை டிசைன் செய்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
பாரத நாட்டின் மீது பற்று இருக்கக்கூடிய தேசப்பற்று மிக்க அவர்களும் பொதுமக்களும் வலதுசாரி சிந்தனையாளர்களும் இந்துத்துவ அமைப்புகளும் இந்துக்களும் இதற்கு கடும் விமர்சனம் முன்வைத்தனர். ஆனால் பெரியாரின் கொள்கை கொண்டவர்கள் அதே புகைப்படத்தை அதிக பின் தொடர்பாளர்கள் வைத்திருக்கக்கூடிய திமுக ஆதரவு influencers அந்த புகைப்படத்தை பதிவிட்டு ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. திடீரென இப்படி ஒரு புகைப்படம் வெளியிட காரணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன்தினம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை இந்தியாவிற்கான ஒரு இணைப்பு மொழியாக பயன்படுத்தலாம் என அறிவித்து இருந்தார்.
இதன் எதிரொலியாக தமிழர்கள் பலரும் இந்தி வேண்டாம் என கூறி அறிதல் புரிதல் இல்லாமல் சமூக வலைத்தள பக்கத்தில் ட்ரண்ட் செய்தனர். அந்தவகையில் ஏ ஆர் ரஹ்மானும், ஆட்சியிலிருக்கும் திமுகவுக்கு ஆதரவாக, தமிழன்னைக்கு புது கலர் கொடுத்திருக்கிறார். அதில் தமிழணங்கு என எழுதியும் இருக்கிறார். ஆனால் பாருங்கள்... ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு இந்தி உருது தெரிந்திருக்கும். ஆங்கிலம் மிக சிறப்பாக தெரிந்திருக்கும். இவர் உலகம் முழுக்க சுற்றி வர மொழியறிவு உதவுகிறது. ஆனால் மற்றவர்கள் யாரும் மொழி அறிவை பெற்று உயர்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாரோ என்னமோ.
இப்படியான ஒரு சமயத்தில், அதே சினிமா துறையை சார்ந்த இயக்குநர் மோகன்ஜி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழன்னை என்ன பதிவிட்டு தமிழ் அன்னையை மிக அழகாக காண்பித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார், இந்த புகைப்படத்தை தம்பி துரை என்பவர் டிசைன் செய்து இருக்கிறார். தம்பி துரை டிசைன் செய்த இந்த புகைப்படத்தை, ஹார்டின் போட்டு தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட, பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தம்பிதுரைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.
ஹிந்தி மொழி விவகாரம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில், இசையமைப்பாளர் ரகுமானுக்கு இயக்குநர் மோகன் ஜி செம்ம கொட்டு வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் பேச தொடங்கி உள்ளனர்.