Cinema

எல்லாம் பொய் பித்தலாட்டம்... கமல்ஹாசன் முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல நடிகை!

Kamal hassan , Harthi ganesan
Kamal hassan , Harthi ganesan

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன், இவர் நடிப்பை தாண்டி அரசியலிலும் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் கமல். இதனை காரணத்தாலேயே கமல் அரசியலுக்கு வந்தார். இந்நிலையில் கமல் குறித்து பிரபல நடிகை வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகநாயகன் என்ற பெயருக்கு தகுதியடையவர் கமல் சினிமாவில் பல்வேறு கெட்டப்பில் நடித்து வரும் கமலஹாசன். சினிமாவை கடந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி மக்கள் இடத்தில் மீண்டும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளார். முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த வ்லாவது சீசன் வரை அருமையாக வழி நடத்தி சென்றார் கமலஹாசன். சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. அந்த நிகழ்ச்சியின் பிறகு மக்கள் கமலை இரு மாதிரியான பேச்சுக்களால் பேசப்பட்டது.

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில்  போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கமல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், என் அப்பாவிற்கு பிறகு கமலைத்தான் என்னுடைய அப்பாவாக பார்க்கிறேன். அந்தளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை எடுத்துக் கூறினார். ஏகப்பட்ட விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதெல்லாம் இப்போது வரை நான் பின்பற்றி வருகிறேன் என கூறிய ஆர்த்தி,

எங்கள் சீசனில் மட்டும்தான் கமல் சார் உண்மையாக இருந்திருக்கிறார் என்ற ஒரு ட்விஸ்ட்டையும் போட்டுடைத்தார். இப்போது உள்ள சீசன் வரை ஆர்த்தி பார்த்துக் கொண்டுதான் இருந்தாராம். முதல் சீசனில் மட்டும்தான் கமல் உண்மையாக இருந்திருக்கிறார் என கூறியிருக்கிறார் ஆர்த்தி. இதிலிருந்து மற்ற சீசன்களில் கமல் வேஷம்தான் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் கமல் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடமும் தனது ஆதரவை தெரிவித்து டைட்டில் வின்னர் வரை கொண்டு செல்வதற்காக பாடு பட்டு வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

ஏற்கெனவே, நடிகை ஆர்த்தி வடிவேலுவின் உண்மை முகத்தை வெளியில் கொண்டுவந்தார். சினிமாவில் வடிவேலு மற்ற நடிகர்களுடன் நடந்து கொள்வது குறித்த தகவலை மிகுந்த வருத்தத்துடன் கொண்டுவந்தார். அது நடிகர் வடிவேலு மீதான தொடர் விமர்சனத்திற்கு ஆர்த்தியின் பேச்சும் அப்படி தான் இருந்தது. தற்போது கமல்ஹாசன் சினிமாவில் கொஞ்ச நேரமும் அரசியலில் கொஞ்ச நேரமும் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.