24 special

முடிவை மாற்றிய முதல்வர்... உளவு அமைப்பு கொடுத்த அதிர்ச்சி தகவல்

Elangovan, mk stalin
Elangovan, mk stalin

முதலுக்கே ஆபத்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...!



 முடிவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்..!




தமிழகத்தில் இருவேறு சம்பவங்கள் குறித்து மாநில உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினின் முடிவை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது ஒன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த சர்வே ரிப்போர்ட் மற்றொன்று பேனா சிலைக்கு உண்டான எதிர்ப்பு என்பது மிக பெரிய பின் விளைவுகளை உண்டாக்க எதிர் தரப்புகள் ஓரணியில் திரள போகிறார்கள் என்று உளவுத்துறை சொன்ன தகவல்.




கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைக்கும் முடிவு என்பது மெல்ல மெல்ல ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று மெரினாவில் மிக பெரிய போராட்டத்தை உண்டாக்க வழி வகை செய்துவிடும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட இந்த விவாகரத்தில் கடலில் பேனா சிலை வேண்டாம் என பின் வாங்கி விட்டார்கள் என உளவுத்துறை அறிக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது.



ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது முதலில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மூலம் தொடங்கியது அதே நேரத்தில் மெல்ல மெல்ல அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற்றது அதே போன்ற அனைத்து காரணங்களும் பேனா சிலைக்கு இருக்கிறது கடலுக்குள் வைக்க கூடாது என இப்போதே சமூக ஆர்வலர்கள் மெரினாவில் பேனாவுடன் நிற்க தொடங்கி இருக்கின்றனர்.



2024- தேர்தலுக்கு முன்பு இந்த விஷயத்தில் தீவிர முடிவு எடுக்கலாம் காலம் கடந்த பின்பு முடிவு எடுப்பதே சரியானதாக இருக்கும் இல்லை என்றால் 2024-ல் பேனா சிலை தேவையா என்பதை மைய படுத்தியே எதிர்க்கட்சிகள் தேர்தலை மையப்படுத்த தயார் ஆவார்கள் என கட்சிதமாக கள தகவலை சேகரித்து கொடுத்து இருக்கிறதாம் மாநில உளவு அமைப்புகள்.



இதயடுத்தே பேனா சிலை வைப்பதில் அனைத்து அனுமதியை பெற்ற பின்பே நிறைவேற்ற இருக்கிறோம் என அரசு கூறிவிட்டு தற்காலியமாக அரசு பின்வாங்கி இருக்கிறதாம். பேனா சிலை கடலுக்குள் வைப்பது குறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன் தொடங்கி பலரும் மாறுபட்ட கருத்து தெரிவித்து இருப்பது முதல்வர் ஸ்டாலினை மட்டுமின்றி திமுக தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய செய்து இருப்பதாக கூறப்படுகிறது.



ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் தலைவருக்கு ஒரு பேனா சிலையை கடலுக்குள் வைக்க முடியாதா? ஆட்சி கையில் இருந்தும் என்ன பயன் என புலம்பி வந்த பல திகுகவினருக்கு இப்போது ஏன் அரசு பின் வாங்கியது என்ற உண்மை தெரிய வந்து இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா சிலை அமைத்தால் அது மிக பெரிய மற்றொரு மெரினா போராட்டத்திற்குள் கொண்டு செல்லும் என்பது மட்டும் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.



அடுத்த வீடியோவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடந்த பஞ்சாயத்தும், இரட்டை இலை நிற்பதால் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆபத்தா? என்பது குறித்து உளவு துறை கொடுத்த தகவல் என்ன களத்தில் நாம் தமிழர் கட்சி எடுக்க போகும் வாக்கு சதவிகிதம் என்ன என்பது குறித்து முழுமையான முடிவுகளை கூற இருக்கிறோம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.