தமிழகத்தில் இந்துக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுத்த நபர்கள் மற்றும் பாதிப்பை எதிர்த்து கேள்வி எழுப்பியவர்கள் மீது சங்கீ என்ற முத்திரை குத்த படுவதுடன் அவர்கள் அரசு பணிகளில் இருந்தால் அவர்களை ஓரம் கட்ட பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்வதாக பல ஆண்டுகளாக இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதே போல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விக்டோரியா கவுரி மீது அடுக்கடுக்காக குற்ற சாட்டுக்களை முன்வைத்து பெரியாரிஸ்ட்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினர் அதில் இந்து ஆதரவாளரான கவுரி நீதிபதியாக வந்தால் எப்படி சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில் அவற்றை புறம் தள்ளி குடியரசு தலைவர் தலைவர் திரபதி முருமு விக்டோரியா கவுரி நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முடிவிற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். இது பல பெரியாரிஸ்ட்களை கதற செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் 21 பேர் ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர்.
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு இடையே விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவருடன் பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி என மொத்தம் 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
ஒருவர் உண்மையை பேசினால் அவர் மீது கட்சி சாயம் மத சாயம் பூசி அவரை அரசு பணியில் இருந்து ஓரம் கட்டி விடலாம் என நினைத்த பலர் இப்போது விக்டோரியா கவுரி நீதிபதியாக பொறுப்பு ஏற்க இருப்பதை பார்த்து மிரண்டு போய் சமூக வலைத்தளங்களில் கதறி வருகிறார்கள் எது எப்படியோ நீதி துறையில் நேர்மையான பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பு ஏற்று இருப்பது மகிழ்ச்சியை கொடுப்பதாக வழக்கறிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.