24 special

அண்ணாமலைக்கு என்ன பதவி? இன்னும் 8 நாட்கள் தான்! அடுத்த இன்னிங்ஸ் ரெடி!அலறும் இண்டி கூட்டணி!

annamalai
annamalai

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.தமிழ்நாட்டில் பா.ஜ.க. நன்றாக காலூன்ற அவர் மிகவும் பாடுபட்டார்.


இதனிடையே பா.ஜ.க.வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டநிலையில், கடந்த ஏப். 11-ஆம் தேதி புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இளைஞர்களின் நாயகனாக விளங்கினார். திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் அண்ணாமலை பாத யாத்திரை, சாட்டையடிப் போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது என்பன போன்ற நூதனமான செயல்பாடுகளால் தமிழக மக்களால் ஈர்க்கப்பட்டார் மேலும் தமிழக பாஜக தினசரி அரசியல் தளத்தில் பேசப்படுவதற்கான ஆதாரமாக விளங்கினார் அண்ணாமலை.

இந்த நிலையில் தென்இந்திய மீடியாக்கள் இப்பொழு து அண்ணாமலை அவர்களின்பெயரை உச்சரிக்க ஆரம்பித்து இருக்கின்றன.எதற்கு தெரியுமா? ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகஅண்ணாமலை தேர்வு செய்யப் பட இருக்கிறார் என்று கூறுகின்றன.ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா இடம் இப்பொழுது காலியாக இருக்கிறது.அதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9 ம் தேதி நடைபெறஇருக்கிறது.வேட்பு மனுத்தாக்கல் வருகின்ற 22 ம் தேதி துவங்கி29 ம் தேதி முடிவடைய இருக்கி றது 

இந்த ராஜ்யசபா  சீட்டிற்கு போட்டி இருக்காது என்பதால் தெலுங்கு தேசம் கூட்டணி சார்பாக யார் வேட்புமனுத்தாக்கல் செய்தாலும் அவர் வெற்றி பெற்றதாக வே ட்பு மனுத்தாக்கல் முடிந்த அன் றே அறிவிக்கப்பட்டு விடுவார்.இந்த ராஜ்யசபா சீட்டிற்கு அண்ணாமலை அவர்களை போட்டியிட வைக்க பிஜேபி தெலுங்குதேசம் கட்சிகள் முடிவு செய்து இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை ராஜ்யசபா எம் பியாகி மத்திய அமைச்சராக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் ராஜ்யாசபா எம்.பி.யாக இருந்த விஜய்சாய் ரெட்டி அண்ணாமலைக்காக ராஜினாமா செய்து இருக்கிறாரா? என்கிற கேள்விகள் வருகிறது.ஏன் என்றால் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மாஸ்டர் மைண்டாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரசின் ராஜ்யசபா தலைவர் விஜய்சாய்ரெட்டி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தன்னுடைய ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்த பொழுது ஆந்திர அரசியலில் பலத்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் எழுந்தது.ஒய்எஸ்ஆர் காங்கிரசில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் தான் விஜய சாய் ரெட்டி.மறைந்த ஆந்திர முதல்வரும் ஜெகன்மோகன் ரெட் டியின் தந்தையான ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பர்தான் விஜயசாய் ரெட்டி.2028 ம்ஆண்டு ஜூன் மாதம் வரை  

உள்ள ராஜ்ய சபா உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஆந்திரா அரசியலில் அதிர்ச்சி அளித்தார்.விஜயசாய் ரெட்டி ஏன் ராஜினா மா செய்தார்? என்பது இது வரை விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது.மிகப்பெரிய தொழில் அதிபர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆடிட்டர் என்று ஆளும் தெலுங்கு தேசத்திற்கு எதிரியாக இருந் த விஜய்சாய் ரெட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் ரீதியாக சந்திரபாபு நாயுடுவிடம் சரண்டராகிய காரணம் இது வரை தெரிய வில்லை.அடுத்த வாரம் அண்ணாமலை அவர்கள் ஆந்திராவில் ராஜ்யசபா வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்து விட்டால் விஜயசாயி ரெட்டி அண்ணாமலை அ வர்கள் மத்திய அமைச்சராக வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்து இருக்கிறார் என்று உறுதியாக விடும்.

தமிழகத்தில் தான் அரசியல் செய்வேன் என கூறி வரும் அண்ணாமலை அவர்களுக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது .அவ்வாறு கட்சி பதவி கிடைத்தால்  மத்திய அமைச்சராக முடியாது . மேலும் தென்னிந்திய பாஜகவின் இணை பொறுப்பை வழங்கவும் உள்ளதாம்  எனவே அண்ணாமலை தரப்பினர் தீவிரமாக யோசித்து வருகிறார்களாம் மேலும் இண்டி கூட்டணியினர் அலறலில் உள்ளார்களாம்.