நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அவரது வெற்றி என்பது குடும்பத்துடன் திரைப்படத்தை சென்று பார்ப்பதில் இருக்கும்.. எங்குமே தனது திரைப்படத்தில் அரசியல் கலக்காமல் பார்த்து கொள்வதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக இருந்தார்.
குறிப்பாக தன்னுடன் சம காலத்தில் திரையில் வந்த விஜய் சேதுபதி தொடர்ச்சியாக அரசியல் கருத்துக்கள் பேசி ஊடகங்கள் மூலம் மிக பெரிய மனிதராக கொண்டாடபட்டார் ஒரு காலத்தில் விஜய் அஜித்திற்கு பிறகு விஜய் சேதுபதிதான் எனும் பேச்சு அடிபட்டது, வாரத்திற்கு இரண்டு திரைப்படங்களை வெளியிடும் அளவிற்கு விஜய் சேதுபதி வளர்ந்தார்.
ஆனால் தொடர்ச்சியாக பாஜக மற்றும் இந்து கலாச்சாரம் மீதான விஜய் சேதுபதியின் மறைமுக விமர்சனம் அவரை கடுமையாக பாதித்தது ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி சமூக ஊடகங்களில் பழையபடி தலை காட்டுவதை நிறுத்திவிட்டார்.
இந்த சூழலில் பிரின்ஸ் திரைப்படம் மூலம் நகைச்சுவை என்ற பெயரில் தேசத்தின் மீது பற்று கொண்ட நபர்களை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்து இருப்பது கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது, அரசியல் தன் மீது விழாத காரணத்திற்காகதான் இதுவரை சிவகார்த்திகேயன் படங்கள் திரையில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறி இருக்கிறது.
ஆனால் தேசபக்தியா மனித நேயமா என காட்சிகளை வடிவமைத்து நாட்டிற்கு உயிர் தியாகம் செய்த வீரர்களை பற்றி துளியும் கவலை படாமல் காட்சிகளை வைத்ததும் பெரும் தோல்வியை சிவகார்த்திகேயன் படத்திற்கு உண்டாக்கி இருப்பதாக பலரும் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் நிஜ தந்தை நாட்டிர்கு சேவை செய்யும் காவலராக இருந்து பணி காலத்தில் உயிரிழந்தவர், அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தேச பக்தியை நீர்த்து போக செய்யும் வகையில் பட கதையை தேர்வு செய்து இருப்பது வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் சீனா வீரர்களிடம் உயிரை இழந்த நம் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திட்ம் நேரில் சென்று தேச பக்தி என்றால் என்ன என கேளுங்கள் சிவகார்த்திகேயன் இனிமேல் இது போன்ற படங்களை தேர்வு செய்ய மாட்டீர்கள் புத்தி வரும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சேராத அணியுடன் சேர்ந்து இப்படி உப்பு சப்பு இல்லாத படத்தை தேர்வு செய்து தற்போது கடும் சிக்கலில் சிக்கியுள்ளார் சிவ கார்த்திகேயன்.