பாரத ரத்னா ஏபி வாஜ்பாய் அவர்களின் 97 வது பிறந்தநாள் நல்லாட்சி தினவிழா தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். இந்நிகழ்வில், பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக 5 முக்கிய நபர்களை பற்றி குறும்படம் வெளியிட்டு அவர்களின் செயல்பாட்டை பெருமை படுத்தி உள்ளது பாஜக. அப்போது அண்ணாமலை பேசும் போது....
கரூரிலிருந்து ஐஸ்கிரீம் கடை வைத்திருக்கும் ஒருவர் 10 லட்சம் ரூபாய் கொண்டு வந்து, பிரதமர் அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் பணத்தை வாங்க நான் சற்று தயங்கினேன் .எப்படி இவ்வளவு பெரிய பணம் கொடுக்குறீங்க.. அந்த அளவுக்கு உங்களுக்கு வருமானம் கிடைக்கிறதா? எப்படி சமாளிப்பீங்க...என நான் கேட்க, அதற்கு அவர் சொன்ன ஒரே ஒரு பதில், "அதையெல்லாம் விட்டு தள்ளுங்க சார் மோடிஜி அவர்கள் தான் கடவுள்; அவருக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது; எப்படியும் இது அவருக்கு கொடுக்க வேண்டும் இதுதான் என்னுடைய விருப்பம்" என தெரிவிக்கின்றார். இந்த அளவுக்கு தேசம் மீதும், நம் பிரதமர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட நெஞ்சங்கள் இருப்பது பெரும் நெகிழ்வை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லி மகிழ்வடைகிறேன் என குறிப்பிட்டார் அண்ணாமலை.
தொடர்ந்து பேசிய அவர், "5 மிக பெரிய மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த மேடையில் பாஜக பெருமை கொள்கிறது. டாக்டர் ஜெயச்சந்திரன்- ஐந்து ரூபாய் டாக்டர், கம்பம்பட்டியை சேர்ந்த டாக்டர் துரைசாமி, 156 ஏக்கர் எடுத்து முழுவதும் பசுமை செய்து, பூமி தாயை பாதுகாக்கிறார். ரிட்டயர்டு அசிஸ்டன்ட் மேனேஜர் கணபதி சுப்ரமணியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை செய்தவர். சென்னையில் உள்ள 2500 சதுர அடி கொண்ட பிளாட்டை, கல்வான் பள்ளத்தாக்கு போரில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்தாருக்கு கொடுத்தவர். ராஜாஜி மருத்துவமனை எதிரில், கேன்டீன் நடந்து வரும் ராஜீவ் தினந்தோறும் 300 முதல் 400 பேருக்கு இலவசமாக காஞ்சி கொடுக்கிறார். டாக்டர் எச்.வி.அண்டே அவர்கள், அரசியல், ஆன்மீகம், இலக்கியவாதி என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் பேசக்கூடிய மிகவும் சிறப்புவாய்ந்த மாமனிதர். தேசத்தின் மீது அதீத பற்று கொண்டவர் என குறிப்பிட்டார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு செயல்களை திறம்பட செய்து வருகிறார். இவரின் செயல்பாடுகள் தமிழக மக்கள் மத்தியில் ஒரு விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் தமிழகத்தில் பாஜக மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.