பஞ்சாப் அரசியலில் பரபரப்பு திருப்பம் உண்டாகியுள்ளது, பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற பிரதமர் மோடியின் வாகனம் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள சூழலில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சூழலில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அமைச்சர்கள் நடமாட முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது.
பஞ்சாப் துணை முதல்வர் ஓ.பி.சோனி நேற்று அமிர்தசரஸ் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, பிரதமரின் பாதுகாப்பு மீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று அவரது காரை தடுத்து நிறுத்தி சூழ்ந்து கொண்டனர். சோனியின் காரை தடுத்து நிறுத்திய பாஜக தொண்டர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிடுவதை வீடியோ காட்டுகிறது.அப்போது அவர் "மோடி ஜிந்தாபாத்" (மோடி வாழ்க ) கோஷங்களை எழுப்பியதைக் காண, போராட்டக்காரர்கள் அவரை விடுவித்தனர். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பஞ்சாப் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் பாதுகாப்பு மீறல் குறித்து நாடு முழுவதும் சர்ச்சை வெடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் தேர்தல் பேரணிக்கு சென்ற பிரதமர் மோடி, அந்த இடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். அந்த பாதை போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது.பிரதமர் 20 நிமிடங்களுக்கு மேம்பாலத்தில் இருந்ததால், கான்வாய் திரும்பி, பதிண்டா விமான நிலையத்திற்குச் சென்றது.பஞ்சாப் அரசு பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக மத்திய அரசும், ஆளும் பாஜகவும் குற்றம் சாட்டின.
பிரதமரின் கடைசி நிமிட திட்டங்களை மாற்றியது அவரது பாதுகாப்பு நெறிமுறையை மீறிய செயல் என்று குற்றம் சாட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. பிரதமர் முதலில் ஹெலிகாப்டரில் பேரணிக்கு செல்லவிருந்தார் ஆனால் மோசமான வானிலை காரணமாக முடியவில்லை. பிரதமர் மோடியின் சாலைப் பயணம் குறித்து பஞ்சாப் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், மாநில காவல்துறைத் தலைவரிடமிருந்து ரூட் கிளியரன்ஸ் எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் இன்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளன. பிரதமரை திருப்பி அனுப்பியதாக பெருமை பேசிய காங்கிரஸ் கட்சியினர் இப்போது சொந்த மாநிலத்தில் நடமாட முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது, இதுவரை அமைதியாக கடந்து சென்ற பாஜக தற்போது தனது ஆட்டத்தை தொடங்கி இருப்பதை இது காட்டுவதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.