24 special

பாட்டிலுக்கு 2 ரூபாய் கமிஷன் குடுக்குறியா இல்லையா? - கரூர் கம்பெனியால் மிரட்டப்படும் டாஸ்மாக் ஊழியர்கள்

senthil balaji
senthil balaji

'கரூர் கம்பெனில இருந்து வர்றோம் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கொடுக்கணும் இல்லன்னா உன் மேல நடவடிக்கை எடுக்க வேண்டியதா இருக்கும்' என டாஸ்மாக் ஊழியர்களை ரவுடிகள் மிரட்டுவதாக பகிர் புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில் மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார், இவரது கீழ் செயல்படும் டாஸ்மாக் துறை நிர்வாகம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவுக்கு வருவாய் ஈட்டி கொண்டிருக்கிறது. ஆனாலும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்து வைத்து விற்க வேண்டும் எனவும், அந்த பத்து ரூபாய் அல்லாது மேலும் இரண்டு ரூபாய் சேர்த்து 12 ரூபாயாக அதிகம் வடிக்கையாளர்களிடம் விற்க வேண்டும் எனவும், அந்த இரண்டு ரூபாய் வித்தியாசப்படும் தொகையை பின்னர் ஆட்கள் வந்து வசூல் செய்து கொள்வார்கள் என கரூர் கம்பெனி மிரட்டி வருவதாக பரபரப்பு புகார் எழுந்தது. 

இதனை புகாராக எழுந்துள்ளது பல்வேறு டாஸ்மாக் ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள விவரங்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன, மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் இது குறித்து தனியார் யூட்யூப் நிறுவனத்திற்கு ஒன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது. 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் கீழ் ஈஸ்வரமூர்த்தி என ஒருவர் இருக்கிறார் அந்த ஈஸ்வரமூர்த்தி ஒவ்வொரு கடையிலும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவியாளர் என மூன்று பேர் இருப்பார்கள் இந்த மூன்று பேரிடமும் அந்த கடைக்கு மாதாமாதம் இவ்வளவு விற்பனை நடக்க வேண்டும் அந்த விற்பனைக்கு ஒரு பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் வீதம் எங்களுக்கு பணத்தை கொடுத்து விட வேண்டும்' எனவும் மிரட்டப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறுவதாக சொன்னார்.

மேலும் தொடர்ந்த அவர், 'உதாரணமாக இரண்டு லட்சம் பாட்டில்கள் விற்றது என்றால் 2 லட்சம் பாட்டில்களுக்கும் சேர்த்து இரண்டு ரூபாய் என 4 லட்சம் ரூபாய் எங்களுக்கு பணத்தை கொடுத்து வேண்டும் அப்படி பணத்தை கொடுக்க விட்டால் நீங்கள் அதற்குண்டான விளைவுகளை சந்திப்பீர்கள் என மிரட்டப்படுவதாகவும், மேலும் அந்த விளைவு என்பது எப்படி இருக்கும் என்றால் உங்கள் கடையில் ஒரு சமூக ஆர்வலர் பேனரை வைத்து கொண்டு நிற்பார், டாஸ்மாக் கடை வாசலில் நீங்கள் வாங்கும் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் அதிகமாக டாஸ்மாக் கடையில் வாங்கினார்கள் என்றால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் என ஒரு நம்பர் அதில் எழுதப்பட்டிருக்கும், ஏதேனும் ஒரு மதுப்ரியர் அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து இதுபோல இந்த பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குகிறார் என புகார் கூறினால் உடனே கண்காணிப்பு அதிகாரிகள், பறக்கும் படையினர் அங்கு வருவார்கள் வந்தவுடன் உங்கள் மேல் புகார் வந்துள்ளது. சஸ்பெண்ட் ஆக வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவார்கள். 

அப்படி இல்லாவிட்டால் நீங்கள் அந்த பணத்தை கட்டுங்கள் என மிரட்டுவார்கள், வேறுவழி இன்றி டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த இரண்டு ரூபாய் தொகையை தற்போது கரூர் கம்பெனிக்கு கட்டி வருகிறார்கள். இந்த கரூர் கம்பெனிக்கு கட்டப்படும் இந்த தொகையானது தினமும் வசூலிக்கப்படுகிறது. டாஸ்மாக்கில் இதற்கென தனியாக இளைஞர் டீம் ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த இளைஞர் டீமை ஈஸ்வரமூர்த்தி நடத்தி வருகிறார். இது குறித்து நான் பேசுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பருக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன் ஆனால் அவர் பார்த்துவிட்டு அதைப் பற்றி எதுவும் கூறவில்லை இந்த நிலையில் இப்படி டாஸ்மாக் கொள்ளை மிகவும் நடந்து வரும் பட்சத்தில் இதுகுறித்து முதல்வர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் கமலாலய குளக்கரையில் சென்று உட்கார்ந்து நினைவலைகளில் மூழ்கி வருகிறார்! 

இப்படி திருவாரூரில் உட்கார்ந்து குளத்தை வேடிக்கை பார்க்கவா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் சவுக்கு சங்கர். ஏற்கனவே கடந்த பத்து நாளைக்கு முன்பு டாஸ்மார்க் பணியாளர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடியதும் நாங்கள் மிரட்டப்படுகிறோம் எனக் கூறியதும் அதை தொடர்ந்து இந்த புகார் எழுந்திருப்பதும் தற்போது சலசலப்பு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து இதுவரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.