24 special

பிரதமரிடம் உதவி கேட்பதற்காக டெல்லி செல்லவிருக்கிறார்... அமைசர் உதயநிதி

modi ,udhayanidhi stalin
modi ,udhayanidhi stalin

பரபரப்பான அரசியல் சூழலில் உதயநிதி அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரையும் சந்திக்கவிருக்கும் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. 


தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி அனுபவம் இல்லாவிட்டாலும் விரைவில் அமைச்சரானார். இவரை விட மூத்த அமைச்சர்கள் துறையில் இருந்தாலும் இவர் அமைச்சர் பொறுப்பை ஏற்றது முதல் தமிழக அமைச்சரவையில் இருக்கும் 35 துறை அமைச்சர்களில் பத்தாவது இடத்தை பிடித்தார். வயதில் மூத்த அமைச்சர்கள் இருந்தாலும் முக்கியத்துறை மற்றும் திட்ட இலாகா பொறுப்பு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் அரசியல் ரீதியாக பாஜகவிடம் மோதல் போக்கை கடைபிடித்து வரும் திமுக அவ்வப்போது எதிர் கருத்துகளையும் கூறி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சியாக இருக்கும் பொழுது மோடி வந்தால் 'கோ பேக் மோடி' என்பதும், கருப்பு பலூன் பறக்க விடுவதும், முழு வீச்சில் பாஜகவை எதிர்த்து களம் கண்டு வந்த திமுக தற்போது ஆளும் கட்சி ஆனவுடன் தனது போக்கை மாற்றிக் கொள்ள துவங்கி விட்டது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் தமிழகத்திற்கு இருமுறை பிரதமர் மோடி வருகையின் போதெல்லாம் திமுகவின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிந்தது. 

பிரதமர் மோடியை வரவேற்க கருப்புக்குடை கூட இல்லாமல் வெள்ளை குடை கொண்டு போனது ஆச்சரியப்படுத்தியது, மேலும் கோ பேக் மோடி பதிவிட்டவர்களை கைது செய்வதும், கோ பேக் மோடி போடக்கூடாது என கூறுவதும் தமிழக அரசியலில் திமுக பாஜகவிடம் சரணடைந்து விட்டதா என கேட்கும் அளவிற்கு இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்த பிரதமர் மோடியை ஸ்டாலின் குழைந்து வரவேற்றதும் பின்பு அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கிருந்து கிளம்பி டெல்லி நேரில் சென்று நன்றி தெரிவித்து வந்ததும் பாஜக வேடன் மோதல் திமுக முற்றிலும் விடுவிட்டதே என விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் பாஜக தீவிரமாக களமாடி வருகிறது குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த விமர்சனங்களை தெரிவித்து வருகிறார், இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை சந்திக்க நேரில் செல்ல உள்ளார். இந்த சந்திப்பு குறித்த பரபர தகவல்கள் கிடைத்துள்ளன. 

நாளை உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார், அங்கு செல்லும் அமைச்சர் உதயநிதி பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா ஒன்றால் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். இதையடுத்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதி அனுமதி கேட்டுள்ளார், அதற்க்கு பிரதமர் அலுவலகம் உதயநிதி சந்திப்பிற்கு நேரம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து களமாடி அரசியல் செய்து விட்டு டெல்லி சென்று பிரதமரிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக இறங்கி வந்தது திமுகவினர் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.