தற்போது தமிழகமே மிகவும் பரபரப்பாக உள்ளது ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகலில் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக ஒட்டுமொத்த நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட தேர்தல்களும் நடைபெற உள்ளது ஜூன் நான்கில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரதமர் தமிழகத்தில் கன்னியாகுமாரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொள்ள இருப்பது மிகவும் கவனம் பெற்றுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இன்று பிற்பகல் தனி விமான மூலம் புறப்படும் பிரதமர் கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகை புரிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்குள் கன்னியாகுமரியை வந்தடைகிறார். பிறகு சாலை மார்க்கமாக பூம்புகார் படகு தளத்திற்கு சென்று பிரதமர் படகுமூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்று தியான மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்குகிறார்.
அப்படி தியானத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூன்1) பிற்பகல் வரை தியானத்தில் ஈடுபட்டு பிறகு அன்று மாலை 3 மணி அளவில் டெல்லி திரும்புகிறார். இதனால் கன்னியாகுமரி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை என் ஐ ஏ அலுவலகத்தில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் எல்லையான கன்னியாகுமரியில் பிரதமர் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளதால் பிரதமர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம், செல்லும் வழிகள், விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமாரியின் கடற்கரை என கன்னியாகுமாரியில் உள்ள சுற்றுலா தலங்கள் மொத்தத்தையும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தங்கள் கண்காணிப்பில் எடுத்துள்ளனர். மேலும் இந்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி இந்திய கடற்படையின் மிக முக்கிய மற்றும் உச்சமான கமாண்டோ படையான மார்க்கோஸ்ட் படைவீரர்கள் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு முதலை வீரர்கள் என்ற பெயரும் உள்ளது. ஏனென்றால் நாட்டின் மிக முக்கிய தலைவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு சீன நடமாட்டம் அதிகமாக காணப்படும் இலங்கைக்கு மிகவும் அருகில் இருக்கின்ற கன்னியாகுமாரியில் பிரதமர் நடுக்கடலில் தியான மேற்கொள்ள உள்ளதால் தரை, வான் மற்றும் கடற்பரப்பு என அனைத்தும் கூடுதல் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது. மேலும் பிரதமரின் பாதுகாப்பிற்காகவே இந்திய கடற்படையின் மிக உச்சமான படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் 30 பேர் இறங்கி உள்ளனர். இவர்கள் இந்திய கடல்சார் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியவர்கள். மேலும் தரை, வான் மற்றும் நீர் வழி என மூன்றிலும் யுத்தம் செய்யும் வல்லமை கொண்டவர்களாகவும் உள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திய எல்லைப் பகுதியில் ஓடுகின்ற வெள்ளத்திலும் நிலைத்த நின்று போரிடும் தன்மை தன்மை கொண்டவர்களாக இந்த படை வீரர்கள் இருப்பதாலே இவர்களை முதலை வீரர்கள் என்றும் அழைக்கின்றனர். அப்படிப்பட்ட முதலை வீரர்கள் 30 பேர் தற்போது பிரதமரை காக்க விவேகானந்தர் மண்டபம் முழுவதும் சூழ்ந்துள்ளனர். முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு பிரதாப்கருக்கு பிரதமர் சென்றிருந்தார். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகும் கேதர்நாத்தில் உள்ள குகையில் வழிபாடு மேற்கொண்டு தியானம் மேற்கொண்டார் அதன் வரிசையிலேயே தற்போது சுவாமி விவேகானந்தர் மீது பிரதமர் கொன்ற பற்றால் கன்னியாகுமாரியில் நடுக்கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.