Tamilnadu

40 நிமிடம் ஆளுநரை சந்தித்து பேசிய "அண்ணாமலை", மதுரைக்கு செல்லும் ஆளுநர் அடுத்த பரபரப்பு !

Tamilnadu Governor
Tamilnadu Governor

தென் மாவட்டமான மதுரைக்கு ஆளுநர் செல்லக்கூடிய நிலையில் அடுத்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தமிழக ஆளுநர் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் பாஜகவினர் மற்றும் தேசியவாதிகள் கைது செய்யப்படுவதாகவும் அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராகவும், பிரதமர் குறித்து அவதூறாக பேசும் நபர்களை தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பல்வேறு நபர்கள் பகிர்ந்த தகவல்கள், பிரிவினையை தூண்டும் கருத்துக்கள் ஆகியவற்றை சேகரித்து அது எந்த பிரிவின் கீழ் குற்றம் எனவும் அண்ணாமலை வகைப்படுத்தி மொத்தமாக அனைத்து ஆதாரங்களையும் ஆளுநரிடம் அழித்துள்ளார், இது குறித்து தமிழக ஆளுநர் நாளை அல்லது தென் மாவட்டங்களில் சுற்று பயணம் முடித்த பின்பு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியை நேரில் அழைத்து விளக்கம் கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில் முழுக்க முழுக்க ஆளும் கட்சியின் அதிகார விதி மீறல் இருப்பதாகவும், அதற்கு மதுரையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளும் துணை நின்ற காரணத்தால் அவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பாக மாரிதாஸை கைது செய்ய மாரிதாஸ் வீட்டிற்கு சென்ற உயர் அதிகாரிதான் மதுரையில் ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள கூடும் என்று கூறப்படுவதால் தற்போது மதுரை மாவட்ட காவல்துறை தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

இனி வரும் நாட்களில் அண்ணாமலை பட்டியலில் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் எனவும் அவ்வாறு எடுக்கப்படவில்லை என்றால் ஆளுநரே நேரடியாக களத்தில் இறங்கும் சூழல் உண்டாகலாம் என கூறப்படுகிறது. அண்ணாமலை ஆளுநரை சந்தித்து 40 நிமிடம் பேசிய சந்திப்பில் கைது சம்பவங்களை தவிர்த்து தென் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரி மற்றும் துணை ஆட்சியர் மாற்றப்பட்ட சம்பவம் குறித்தும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசண்ட் திவ்யா மாற்றப்பட்ட விவாகரத்தின் பின்னணி குறித்தும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.