Tamilnadu

"சுந்தரவள்ளி" எதிர்பார்த்து சென்றது வேறு நடந்தது வேறு.. பாவம் கதறல் பேட்டி!

Sundaravalli film review
Sundaravalli film review

சமீபத்தில் ஊதா சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ஆண்டி இந்தியன் என்ற திரைப்படத்தை பார்க்க சென்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவர் தெரிவித்த கருத்து இணையத்தில் கடும் கிண்டலை உண்டாக்கியுள்ளது, குறிப்பாக தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என வெளிக்காட்டி கொண்ட சுந்தரவள்ளி தனது விமர்சனம் மூலம் அம்பலப்பட்டு போயிருக்கிறார்.


திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சுந்தரவள்ளி..திரைப்படத்தின் நோக்கம் நன்றாக இருக்கிறது ஆர் எஸ் எஸ் பாஜக முக மூடியை கிழித்து இருக்கிறது என தெரிவித்தவர் படத்தில் கிறிஸ்துவர்களை மதம் மாற்றம் செய்பவர்களாக காட்டி இருக்கும் செயல் எனக்கு முரணாக தெரிவதாக குறிப்பிட்டார் அதாவது இந்துக்கள் குறித்து பேசினால் சரியானது எனவும்.,

அதே நேரத்தில் கிறிஸ்வர்கள் குறித்து விமர்சனம் செய்தது முரணாக இருப்பதாக "சுந்தரவள்ளி" குறிப்பிட்டு இருப்பது உண்மையில் சுந்தரவள்ளி போன்றோரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மொத்தத்தில் மதம் இல்லை என்று சொல்லும் பலர் கிறிஸ்தவர்களாகவும் "கிருஸ்தவத்தை" விமர்சனம் செய்தால் மட்டும் முரண் என்று சொல்லும் நபர்களாக மட்டுமே இருக்கிறார்கள் எனவும் சுந்தரவள்ளி போன்றோரின் செயல்பாடு அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

விமர்சனம் என்பது அனைத்து மதத்தில் இருக்கும் தவறுகள் குறித்தும் எடுத்து சொல்வதே சரியாக இருக்கும் அப்படி இருக்கையில் அனைத்து மதத்தையும் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படும் ஆண்டி இந்தியன் திரைப்படத்தில் வலுவான முறையில் இந்துத்துவத்தை விமர்சனம் செய்யவில்லை என சுந்தரவள்ளி தெரிவித்து இருப்பது சுந்தரவள்ளி போன்றோருக்கு இந்து மதத்தின் மீதுள்ள வெறுப்பா?  அல்லது கிறிஸ்தவ மதத்தின் மீதுள்ள ஆர்வமா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சுந்தரவள்ளி திரைப்படத்தின் தலைப்பு ஆண்டி இந்தியன் என வைத்து இருந்ததால் தொடர்ந்து பாஜக, இந்து அமைப்புகள் குறித்த படமாக இருக்கும் என நினைத்து ஆவலுடம் படம் பார்க்க சென்றுவிட்டு இறுதியில் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து இருப்பதாக கூறி முரணாக இருப்பதாக தெரிவித்து இருப்பது கடும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.