Tamilnadu

#BREAKING டிஜிபி அலுவலகத்தில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு சென்ற போன் கால் பின்வாங்கியது தமிழக அரசு !

stallin and annamalai
stallin and annamalai

எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யபட்ட நிலையில் தமிழக அரசிற்கு கடும் பின்னடைவு உண்டாகியுள்ளது, குறிப்பாக நீதிமன்றத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள தமிழக அரசு தரப்பு நிர்வாக ரீதியாக விமர்சனத்தை தவிர்க்க பாஜக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய சம்பவம் வெளியாகியுள்ளது. முப்படை தலைமை ராணுவ தளபதி இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள யூ மாரிதாஸ், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், முப்படை தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேக கேள்வியை எழுப்பிய சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என நேற்று கேள்வி எழுப்பியது.


மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.அப்போது, மாரிதாஸின் கருத்து தமிழகத்தின் நேர்மை தன்மை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அவர் தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு கருத்து பதிவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும்  அதற்கு வழக்கு பதியப்பட்டு,கைது செய்யப்பட்டதால், கருத்து சுதந்திரத்தின் சிறகுகள் காயப்பட்டுள்ளதாகவும் மாரிதாஸ் தரப்பில் நேற்று வாதம் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார், அதில் தொடர்ந்து தேசியவாதிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், ஆனால் முப்படை தளபதி மரணத்தை கொண்டாடும் வகையில் பதிவு செய்த திமுகவினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார் அண்ணாமலை. மேலும் கடுமையாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி குறித்து விமர்சனம் செய்தார் அண்ணாமலை,இந்த சூழலில்தான் நேற்றைய தினம் டிஜிபி அலுவலகத்தில் இருந்து தமிழக பாஜக ஐடி பிரிவை தொடர்பு கொண்டு, தங்களிடம் உள்ள 300 நபர்கள் குறித்த ஆதாரத்தை கொடுக்குமாறும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது பாஜக குற்றம் சுமத்திய திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க டிஜிபி முடிவு செய்து இருப்பதாகவே இதன் செயல்பாடு பார்க்கப்படுகிறது மேலும் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என நினைத்து செயல்பட்ட தமிழக அரசு, பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இன்னும் பிறர் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலலும் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையிலும் அந்த முடிவில் இருந்து சற்று பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.