வாக்குப்பதிவு நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என திமுக கூட்டணி இந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கிய காரணத்தினால் 500 கோடி ரூபாய் வரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் புரண்ட விவகாரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. திமுக தரப்பு வேட்பாளரான இ.வி.கே.இளங்கோவனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே நமது அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் இருக்கும் இல்லையேல் பின்னடைவு தான் என காங்கிரசை விட நன்கு உணர்ந்தது திமுக.
மேலும் திமுக அரசின் உளவுத்துறை அறிக்கை கூட திமுகவின் பின்னடைவை முதல்வருக்கு அறிக்கையாக கொடுத்தது, அதன் காரணமாகவே கடைசி நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் அமைச்சர் உதயநிதியும் குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்கும் வாக்குறுதியை பற்றி பேசினார்கள், தோல்வி பயமே திமுகவை வாக்குறுதியை பற்றி மக்களிடம் பேசவைத்து.
இதன் காரணமாகவே இவிகேஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் உழைத்ததை விட திமுக அதிகமாக உழைத்தது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்ற திமுகவின் அனைத்து அமைச்சர்களும் தீயாக வேலை பார்த்தனர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மூன்று நாட்கள் கூட யாரும் அங்கு தங்க வில்லை ஆனால் தேர்தல் பரப்புரை நடந்த 20 நாட்களும் திமுகவினர் அனைத்து அமைச்சர்களும் அங்கேயே தங்கி இருந்தனர். போதாக்குறைக்கு முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் கூட அங்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட தேர்தல் வாக்குறுதிகளை பற்றி வாய் திறக்காமல் இருந்த முதல்வர் கூட இறுதி நாள் பிரச்சாரத்தில் உங்கள் வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அதை மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள் மக்களே என்ற ரீதியாக பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வாரத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் திமுகவினர் மக்களை அடைத்து வைத்திருக்கும் பட்டியில் சென்று செய்தி சேகரித்தனர், அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் நங்கள் இங்கு தினமும் வருகிறோம், எங்களுக்கு தினமும் 500 ரூபாய், சாப்பாடு கொடுக்கிறார்கள் என கூறியதும் அங்கு இருந்த திமுகவினர் அந்த செய்தியாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரை அடித்து விரட்டிதும் அதனை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை அரசு கேபிள் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டதும் பரபரப்பானது.
இந்த நிலையில் பிரபல தனியார் பத்திரிகை ஒன்று அதனுடைய செய்தி தொகுப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 500 கோடி ரூபாய் வரை பணம் புரண்டது என இது பற்றி விரிவாக கூறியுள்ளது, பிரபல வாரப்பத்திரிகையின் செய்தியாளர்கள் குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி களத்தில் நிலவும் சம்பவங்களை தொகுத்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு அந்த கள நிலவரம் பற்றி கூறுகையில், 'அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஈரோடு கிழக்கில் 500 கோடி ரூபாய் வரை பணம் செலவழித்துள்ளனர். இந்த பணமானது ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் நிறைந்துள்ளது, இது வாக்காளர்களுக்கு உணவாகவும், வெள்ளி டம்ளராகவும், கொலுசாகவும், பட்டுப் புடவையாகவும், பணமாகவும் பல்வேறு விதத்தில் மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும், அனைத்து வார்டுகளிலும் இந்த பணம் நிறைந்துள்ளது எனவே இந்த தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்டு வந்த திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சியது இது எனவும் குறிப்பிடலாம் என்று அந்த வார பத்திரிகையின் யூட்யூப் சேனல் வீடியோவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடுக்கு கிழக்கு என்ற ஒரு பார்முலாவை 500 கோடி செலவழித்து தமிழக அரசியல் கட்சிகள் உருவாக்கி விட்டனர்.