முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றது, இந்த இரண்டு ஆண்டுகளில் பல ஏற்ற இறக்கங்களை திமுக கட்சி சந்தித்து இருந்தாலும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படும் விஷயம் திமுகவில் நிழல் முதல்வர்கள் அதிகம் என்பது, ஆனால் தற்போது திமுக அரசு 5 முதல்வர்களுடன் செயல்பட்டு வருகிறது, அதிகாரத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கே அதிகாரம் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெறும் பொம்மை போல் அமர வைக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு எந்த ஒரு அறிக்கையும் செல்வதில்லை, மக்களின் குறைகள் அவரது பார்வைக்கு செல்வதில்லை, போட்டோ சூட் என்றால் வந்து நின்று விடுகிறார், அவரிடம் நடக்க வேண்டிய விஷயங்கள் அதிகாரிகளிடம் மூலமாக அவருக்கு போய் சேர்வதில்லை, மக்களின் குறைகள் முற்றிலும் மறைக்கப்படுகின்றன, அதிகாரிகள் முதல்வருக்கு பயந்து நடப்பதில்லை, கீழ்படிவதில்லை, அதிகாரிகளின் நியமனங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையின்படி நடப்பதில்லை, எந்தெந்த அதிகாரி எந்த வேலைகள் செய்கிறார் என முதல்வருக்கு புரிவதில்லை, உளவுத்துறையின் அறிக்கைகள் சென்றடைவதில்லை, இதெல்லாம் போதாது என்று கூட்டணி கட்சிகளின் நிலவரங்கள் கூட அவருக்கு தெரிவதில்லை அவர் வருவதில்லை என்ற தகவல்கள் தற்பொழுது தீயாக வெடித்துள்ளன.
இதன் காரணமாக திமுகவில் ஐந்து முதல்வர் செயல்படுகிறார்கள் என்ற தகவலும் பகீர் தகவலும் கிடைத்துள்ளது, இது குறித்து மூத்த பத்திரிகையாளர், சவுக்கு இணையதளத்தின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் தனியார் யூ ட்யூப் பேட்டி ஒன்றில் கூறுகையில், 'திமுகவில் மொத்தம் 5 முதல்வர்கள் உள்ளனர், முதல் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஒரு முதல்வர், மருமகன் சபரீசன் ஒரு முதல்வர், மகன் உதயநிதி ஒரு முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முதல்வர், உதயச்சந்திரன் ஒரு முதல்வர்' இப்படியாக ஐந்து முதல்வர் குழுடன் திமுக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஐந்து முதல்வர்கள் தான் தீவிரமாக செயல்படுகிறார் தவிர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செயல்படுவதில்லை, இவர்கள் தான் அதிகாரிகளை நியமனங்களை பார்த்துக் கொள்கிறார்கள், தொழில் மற்றும் அமைச்சர்கள், எந்தெந்த துறையில் எவ்வளவு வருவாய் வருகிறது என்பதை சபரீசன் பார்த்துக் கொள்கிறார், அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் கட்சியினரை உதயநிதி பார்த்துக் கொள்கிறார், அறநிலையத்துறையை முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சேர்த்து கவனிக்கிறார், இதெல்லாம் போதாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தனியாகவே கட்சி தொடங்கும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் விட டாஸ்மாக் மற்றும் மின்துறையில் அதிக வருவாய் குவித்துக் கொண்டிருக்கிறார்.
அதிகாரிகள் எல்லாம் உதயச்சந்திரன் செயலுக்கு ஆடுகிறார்கள் இப்படி முதல்வரை டம்மி ஆக்கிவிட்டு ஐந்து முதல்வர்கள் போடும் ஆட்டம் தான் தற்பொழுது திமுகவில் அதிகமாக உள்ளது' எனக்கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை அவர் பொம்மை முதல்வர் போல் செயல்படுகிறார் என்ற தகவலும் தற்போது வேகமாக பரவி வருவதால் அறிவாலய தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
வாக்குறுதிகள் நிலுவையில் இருக்கிறது, திட்டங்கள் செயல்பாடு சரிவர செயல்படாமல் இருக்கிறது, விலைவாசி உயர்வு, விண்ணை முட்டுகிறது இப்படி பல அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இப்படி மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அவர் பொம்மைபோல் செய்யப்படுகிறார், 5 முதல்வர்கள் தனியாக அவர் குடும்பத்தில் இருக்கின்றனர் என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் திமுகவின் மீதான மக்களின் பிம்பத்தை மாற்றியுள்ளது.