24 special

வேங்கைவயல் விவகாரத்துல தூங்குவோம்! - விமர்சனம் பண்ணுனா தூக்குவோம்! - திமுக அரசின் பலே செயல்பாடுகள்!

Dmk
Dmk

வேங்கைவயல் விவகாரத்தில் நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் திமுக அரசு தற்பொழுது சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த காரணத்திற்காக காரணம் காண்பித்து ஒருவர் மீது தஞ்சையில் வழக்கு பதிவு செய்து அவரை குஜராத் மாநிலத்திற்கு விமானத்தில் சென்று மெனக்கெட்டு கைது செய்து அழைத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சமீபகாலமாக தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருபவர்களை சிறையில் வைப்பதும், அவர்கள் மீது வழக்குகள் தொடுப்பதும், காவல்துறையை ஏவி அவர்களை மன ரீதியாக நிலைகுலைய செய்வதும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வாடிக்கையாகி வருகிறது. 

சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் அவர்களை முதல்வர் குடும்பத்தை விமர்சித்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஏற்கனவே அவர் மீதுள்ள புகாரை தூசி தட்டி காரணம் காண்பித்து 63 நாட்கள் அவரை சிறையில் தள்ளியது திமுக அரசு, சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் திமுக அரசு செய்யும் ஒட்டுமொத்த முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி வருகிறார். மற்றொரு சம்பவமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான உடன் அவரது விளையாட்டு துறையை குறிப்பிட்டு ஒரு படத்தை பதிவு செய்ததற்காக அமமுக நிர்வாகி ஒருவரை வேதாரண்யத்தில் வழக்கு பதிவு செய்து சென்னையில் போய் கைது செய்தது தமிழக காவல்துறை. 

இப்படி பம்பரம் போல சுழலும் அரசு எந்திரம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலந்தவர்களை 4 மாதம் ஆகியும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் தரும் அளவிற்கு இருந்துவிட்டு கைது செய்யாமல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் அவர்களை தனியாக நடமாட முடியாது என மிரட்டியதும், திமுக பேச்சாளர் சைதை சாதிக் குஷ்புவை அவதூறாக பேசியதை பாஜக சார்பில் போராட்டம் நடத்தியும் கைது செய்யாமல் இருப்பதும், கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் திமுக இளைஞர் அணியினர் பெண் காவல் துறை அதிகாரியிடம் சில்மிஷம் செய்ததை மிகுந்த அழுத்தத்திற்கு பிறகு கைது செய்ததும் வாடிக்கையாக வைத்து வருகிறது திமுக அரசு. 

இந்த நிலையில் சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரது மகன் ஜான் ரவீந்திரநாத். ஜான் ரவி என அழைக்கப்படும் இவர் சமூக வலைத்தளத்தில் மிகுந்த பரபரப்புடன் செயல்படுபவர், அடிக்கடி அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இவர் வெளியிட்ட சில பதிவுகள் திமுக அரசை விமர்சிப்பதாகவும், முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகவும் திமுகவினரை கொந்தளிப்படைய செய்தது. இந்த நிலையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் துரைமுருகன் இருக்கும் படத்தை பதிவிட்டு அதில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு ஜான் ரவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவை புகாராக வைத்து திமுக ஐடி விங் நடத்தும் தனிப்பட்ட முறையில் நடத்தும் ITW ரிப்போர்ட்ஸ் என்ற ட்விட்டர் ஐடியில் புகார் பதிவு செய்யப்பட்டது, இந்த புகாரை காவல்துறைக்கு அனுப்பியது திமுக ஐடி விங் நடத்தும் ITW ரிப்போர்ட்ஸ் ஐடி. 

இந்த புகாரின் அடிப்படையில் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார். புகாரை பெற்றவுடன் மின்னல் வேகத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, தஞ்சாவூர் பகுதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விமானத்தில் சென்று குஜராத் மாநிலத்தில் இருந்த ஜான் ரவியை கைது செய்துள்ளனர். 

மற்ற விவகாரங்களில் காவல்துறை மெத்தனப்போக்காக நடந்துவிட்டு முதல்வரை விமர்சனம் செய்தவரை விமானத்தில் பறந்து கைது செய்த விவகாரம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.